பஞ்சாப் கிங்சுடன் இன்று மோதல்: வெற்றி கணக்கை தொடங்குவாரா டோனி?

தினகரன்  தினகரன்
பஞ்சாப் கிங்சுடன் இன்று மோதல்: வெற்றி கணக்கை தொடங்குவாரா டோனி?

மும்பை: ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 8வது லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னை முதல் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியிடம் தோல்வி கண்டது. அந்த போட்டியில் 189 ரன் அடித்தும் சொதப்பலான பந்துவீச்சால் தோல்வி அடைந்தது. ரெய்னா பார்மில் உள்ளார். ருதுராஜ்க்கு பதில் இன்று உத்தப்பாவுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது. இதேபோல் பந்துவீச்சிலும் மாற்றங்கள் இருக்கலாம். டோனி முதல் போட்டியில் டக்அவுட் ஆன நிலையில் இன்று அதிரடி காட்டுவாரா என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இன்று வெற்றி கணக்கை தொடங்க வேண்டிய நிலையில் சென்னை களம் காண்கிறது.மறுபுறம் பஞ்சாப் கிங்ஸ் முதல் போட்டியில் ராஜஸ்தானை 4 ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய உற்சாகத்தில் உள்ளது. கேப்டன் கே.எல்.ராகுல் பேட்டிங்கில் சூப்பர் பார்மில் உள்ளார். தீபக் ஹூடா, கிறிஸ் கெய்ல், நிகோலஸ் பூரன், ஷாருக்கான் என அதிரடி பேட்டிங் வரிசை உள்ளது. பந்துவீச்சில் முகமது ஷமி, அர்ஷத்தீப் சிங், ஜய் ரிச்சர்ட்சன் எதிரணிக்கு நெருக்கடி அளிப்பர். அணியில் எந்த மாற்றமும் இருக்க வாய்ப்பு இல்லை. வெற்றியை தொடரும் முனைப்பில் பஞ்சாப் ஆடும். இவ்விரு அணிகளும் இதுவரை 23 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 14ல் சென்னை, 8ல் பஞ்சாப்பும் வெற்றி பெற்றுள்ளன.

மூலக்கதை