இந்தியாவின் இளைஞர் எண்ணிக்கை; சீனா அச்சம்

தினமலர்  தினமலர்
இந்தியாவின் இளைஞர் எண்ணிக்கை; சீனா அச்சம்

பெய்ஜிங்: உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு சீனா. இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியாவை தொடர்ந்து முந்திக்கொண்டிருக்கிறது சீனாவின் மக்கள் தொகை. இதன்காரணமாக சீன கம்யூனிச அரசு தனது மக்கள் தொகையை கட்டுப்படுத்த தீவிர முனைப்பில் ஈடுபட்டு வருகிறது. இதனால் கருத்தடை அறுவை சிகிச்சைக்கு சீனா தனது நாட்டு குடிமக்களை ஊக்குவித்து வருகிறது. தற்போது சீன மத்திய வங்கி இதுகுறித்து ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது.

சீனாவின் எதிரி நாடுகளான அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகியவற்றின் போட்டியை சமாளிக்க சீன கம்யூனிச அரசு தனது மக்கள்தொகையை கட்டுப்படுத்துவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று இந்த வங்கி கூறியுள்ளது. புதிதாக திருமணம் செய்து கொள்ளும் சீன குடிமக்கள் குழந்தை பெற்றுக் கொள்வதை குறைத்துக்கொண்டால் சீனாவின் மக்கள் தொகை இந்தியாவைவிட பின்னுக்கு தள்ளப்படும்.


2021 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சீனாவில் வயோதிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆகவே வரும் ஆண்டுகளில் பிறப்பு சதவீதத்தை விட இறப்பு சதவீதம் சீனாவில் அதிகமாக இருக்கும். இதனை சமாளிக்க பிறப்பு சதவீதத்தை இறப்பு சதவீதத்திற்கு சமன் செய்ய வேண்டியது அரசின் கடமை. இந்தியாவில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகம். அமெரிக்கா தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கி வருகிறது. இவற்றுடன் போட்டிபோட இளைஞர் ஆற்றல் தேவை என்றுள்ளது.

மூலக்கதை