மில்லர், கிறிஸ்மோரிஸ் அதிரடியில் முதல் வெற்றியை சுவைத்தது ராஜஸ்தான்

தினகரன்  தினகரன்
மில்லர், கிறிஸ்மோரிஸ் அதிரடியில் முதல் வெற்றியை சுவைத்தது ராஜஸ்தான்

மும்பை: மில்லர் மற்றும் கிறிஸ்மோரிஸ் அதிரடியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் முதல் வெற்றியை சுவைத்தது. 19.4 ஓவரில் 150 ரன் எடுத்து டெல்லி கேப்பிடல்சை வீழ்த்தியது. ஐபில் தொடரின் 7வது போட்டியில் நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய அணிகள் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து டெல்லி கேப்பிடல் அணியின் தொடக்க வீரர்களாக பிரித்விஷா, ஷிகர்தவான் ஆகியோர் களம் இறங்கினர். உனத்கட் வேகத்தில், டெல்லி அணியின் பிரித்விஷா 2, ஷிகர்தவான் 9, ரகானே 8 ரன்னில் ஆகியோர் சொற்ப ரன்னில் விக்ெகட் இழந்தனர்.  மார்க்கஸ் ஸ்டோனிஸ் ‘டக்’ அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். இதனால் டெல்லி அணி 100 ரன்னை தாண்டுமா என்ற சந்தேகம் எழுந்தது. இந்நிலையில் அதிரடியாக ஆடிய ரிஷப், 9 பவுண்டரிகளை விளாசினார். 32 பந்தில் 51 ரன் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். இதனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் ரன் ரேட் குறைந்தது. அடுத்து வந்த லலித் யாதவ், 20 ரன்னில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். மேலும் டாம் கரன் 16 பந்தில் 21 ரன் எடுத்து கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேப்பிடல்ஸ் 8 விக்கெட் இழந்து 147 ரன் எடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 148 ரன் என்ற இலக்கை நிர்ணயித்தது. இந்நிலையில் 148 இலக்கை விரைவில் எட்டிவிடலாம் என்று களம் இறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. ராஜஸ்தான் அணியின் ஓபனர்களை தன்னுடைய வேக பந்து வீச்சில் அதிரடியாக காலி செய்தார் வோக்ஸ். மனன்வேரா, ஜோஸ்பட்லர் ஆகியோரின் விக்கெட்டை அள்ளினார். அதன் பின்னர், கேப்டன் சஞ்சு சாம்சன், ஷிவம் துபே ஆகியோர் ெசாற்ப ரன்களில் அவுட் ஆனார்கள். இந்நிலையில், களம் இறங்கிய மில்லர் 43 பந்தில், 7 பவுண்டரி, 2 சிக்ஸர் என 62 ரன் எடுத்தார். பின்னர் கிறிஸ்மோரிஸ் அதிரடியாக ஆடி 18 பந்தில் 4 சிக்ஸர் உட்பட 36 ரன் குவித்தார். அவருக்கு உனத்கட் உறுதுணையாக இருந்தார். வெற்றி பெற 4 ரன்கள் தேவை என்ற நிலையில் மோரிஸ், சிக்ஸர் அடித்து ராஜஸ்தானுக்கு வெற்றியை உறுதிபடுத்தினார். இதனால் ராஜஸ்தான் 19.4 ஓவரில் 7 விக்கெட் இழந்து 150 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

மூலக்கதை