பொதுத் துறை பங்குகள் மத்திய அரசு விற்பனை

தினமலர்  தினமலர்
பொதுத் துறை பங்குகள் மத்திய அரசு விற்பனை

புதுடில்லி;மத்திய அரசு, தன் வசம் இருக்கும், என்.எப்.எல்., என அழைக்கப்படும், ‘நேஷனல் பெர்ட்டிலைசர்ஸ் லிமிடெட்’ நிறுவனத்தின் பங்குகளில், 20 சதவீதத்தை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.

மேலும், ஆர்.சி.எப்., எனும், ‘ராஷ்ட்ரியா கெமிக்கல்ஸ் அண்டு பெர்ட்டிலைசர்ஸ்’ நிறுவனத்தின், 10 சதவீத பங்குகளையும் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.இந்த இரண்டு நிறுவனங்களின் பங்குகளையும், இந்த நிதியாண்டுக்குள் விற்பனை செய்யவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:பங்கு விற்பனைக்கான பணிகளை நிர்வகிப்பதற்கான வங்கிகள் விரைவில் நியமிக்கப்பட உள்ளன. தற்போது மத்திய அரசின் வசம், என்.எப்.எல்., நிறுவனத்தின், 74.71 சதவீத பங்குகளும்; ஆர்.சி.எப்., நிறுவனத்தின், 75 சதவீத பங்குகளும் உள்ளன.என்.எப்.எல்., நிறுவன பங்குகளை விற்பதன் மூலம், 500 கோடி ரூபாயும்; ஆர்.சி.எப்., நிறுவன பங்குகளை விற்பனை செய்வதின் மூலம், 400 கோடி ரூபாயும் திரட்ட முடியும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை