எகிப்தில் விபத்து 21 பேர் பலி

தினமலர்  தினமலர்

கெய்ரோ:எகிப்தில், பஸ் மீது லாரி மோதிய விபத்தில், 21 பேர் பலியாகினர்.

ஆப்ரிக்க நாடான எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் இருந்து, நேற்று, பயணியருடன் பஸ் ஒன்று சென்றது. அசியுட் மாகாணத்தின் நெடுஞ்சாலையில் சென்றபோது, முன்னால் சென்ற லாரியை கடந்து செல்ல, பஸ் டிரைவர் முயற்சித்தார்.அப்போது, அந்த பஸ், சாலையில் சறுக்கி, தலை கீழாக கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதையடுத்து, வேகமாக வந்த லாரி, பஸ் மீது மோதியதில், தீப்பிடித்தது.தீ மளமளவென இரண்டு வாகனங்களிலும் பரவியது. இதில், 21 பேர், சம்பவ இடத்திலேயே, உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

மூலக்கதை