கனடா பார்லி., கூட்டத்தில் எம்.பி., நிர்வாண கோலம்

தினமலர்  தினமலர்

ஒடாவா:'வீடியோ கான்பரன்சிங்' வழியாக நடந்த, கனடா பார்லிமென்ட் கூட்டத்தின் போது, எம்.பி., ஒருவர் நிர்வாணமாக தோன்றியது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வட அமெரிக்க நாடான கனடாவில், கொரோனா பரவல் காரணமாக, பார்லிமென்ட் கூட்டத்தில், எம்.பி.,க்களில் பலரும், வீடியோ கான்பரன்சிங் வழியாக பங்கேற்று வருகின்றனர்.கனடா பார்லிமென்ட் உறுப்பினராக இருப்பவர் வில்லியம் ஆமோஸ். இவர், நேற்று முன் தினம், பார்லிமெட் கூட்டம் நடந்த போது, வீடியோ கான்பரன்சிங்கில் நிர்வாணமாக தோன்றினார். கையில் மொபைல் போனுடன், ஒரு மேஜைக்கு பின், நிர்வாணமாக நின்ற அவரது புகைபடமும், வீடியோவும் வெளியாகியுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி, எம்.பி.,க்கள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது பற்றி, ஆமோஸ் கூறுகையில், ''நடை பயிற்சி முடித்து, உடைகளை மாற்றிக் கொண்டிருந்தேன். அப்போது எதிர்பாராதவிதமாக, இந்த சம்பவம் நடந்து விட்டது; இது, துரதிருஷ்டவசமானது,'' என்றார்.

மூலக்கதை