தேசிய ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் 5 தங்கப் பதக்கங்கள் வென்று தமிழக வீராங்கனை சாதனை!: குவியும் பாராட்டுக்கள்..!!

தினகரன்  தினகரன்
தேசிய ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் 5 தங்கப் பதக்கங்கள் வென்று தமிழக வீராங்கனை சாதனை!: குவியும் பாராட்டுக்கள்..!!

பஞ்சாப்: தேசிய அளவில் நடைபெற்ற ரோலர் ஸ்கேட்டிங் விளையாட்டு போட்டியில் சென்னையை சேர்ந்த டாக்டர் ஆர்த்தி 5 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். சண்டிகர் நகரில் ஏப்ரல் 5ம் தேதியிலிருந்து 9ம் தேதி வரை 58வது தேசிய ரோலர் ஸ்கேட்டிங் போட்டிகள் நடைபெற்றன. இதில் நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் இவ்விளையாட்டில் சென்னையை சேர்ந்த ஆர்த்தி 5 தங்கபாதகங்களை அள்ளி குவித்துள்ளார். இதில் தனித்திறனை நிரூபிக்கும் 4 ஸ்கேட்டிங் போட்டிகளில் மற்ற வீராங்கனைகளை வீழ்த்தி ஆர்த்தி வெற்றிபெற்றார். இதேபோன்று குழுவாக அங்கம் வகிக்கும் ரிலே ரோலர் ஸ்கேட்டிங் போட்டியிலும் ஆர்த்தி பங்கேற்ற குழுவே வெற்றி வாகை சூடியது. தேசிய அளவில் நடைபெற்ற ரோலர் ஸ்கேட்டிங் போட்டிகளில் 5 தங்கப் பதக்கங்களை வென்ற ஆர்த்தி கொலம்பியாவில் நடைபெறும் உலக சான்பியன் ஷிப் போட்டியில் பங்கேற்க இந்திய சார்பாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தேசிய ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் தனித்திறன் போட்டிகளில் 4 தங்கம், குழுவாக ஒரு தங்கம் என 5 தங்கப் பதக்கங்கள் வென்ற மருத்துவர் ஆர்த்திக்கு பாராட்டு மழை பொழிந்து வருகின்றது. ரோலர் ஸ்கேட்டிங் பெடரேஷன் ஆப் இந்தியா சார்பில் பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் தேசிய ரோலர் ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை