தமிழகத்தில் மேலும் கட்டுப்பாடுகள்?.. தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் நாளை ஆலோசனை

தினகரன்  தினகரன்
தமிழகத்தில் மேலும் கட்டுப்பாடுகள்?.. தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் நாளை ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக சுகாதாரத்துறை செயலாளருடன், தலைமைச் செயலாளர் நாளை ஆலோசனை நடத்துகிறார். ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்துகிறார்.

மூலக்கதை