ருத்ரதாண்டவம் ஆடும் கொரோனா தொற்று!: இந்தியாவில் ஒருநாள் பாதிப்பு 2 லட்சத்தை தாண்டியது..1000-ஐ கடந்த உயிரிழப்பு..!!

தினகரன்  தினகரன்
ருத்ரதாண்டவம் ஆடும் கொரோனா தொற்று!: இந்தியாவில் ஒருநாள் பாதிப்பு 2 லட்சத்தை தாண்டியது..1000ஐ கடந்த உயிரிழப்பு..!!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,73,123 ஆக உயர்ந்துள்ளது. அதே போல், இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,40,74,564 - ஐ தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 2,00,739 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,40,74,564 ஆக உயர்ந்தது.* புதிதாக 1038 பேர் இறந்துள்ளனர்.* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,73,123 ஆக உயர்ந்தது.* தொற்றில் இருந்து ஒரே நாளில் 93,528 பேர் குணமடைந்துள்ளனர்.* இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,24,29,564 ஆக உயர்ந்துள்ளது. * இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 14,71,877 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. * இந்தியாவில் 11,44,93,238 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.

மூலக்கதை