பாக்., கட்சிக்கு தடை

தினமலர்  தினமலர்
பாக்., கட்சிக்கு தடை

பாக்., கட்சிக்கு தடை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில், நபிகள் நாயகத்தை அவமதித்ததாகக் கூறப்படும் பிரான்ஸ் துாதரை வெளியேற்றக் கோரி, தெஹ்ரீக் - -இ - -லபாய்க் கட்சியினர், கடந்த சில நாட்களாக வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில், இரு போலீசார் உட்பட ஏழு பேர் கொல்லப்பட்டதுடன், 300க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர். இதையடுத்து, ''பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் அக்கட்சி தடை செய்யப்படும்,'' என, பாக்., உள்துறை அமைச்சர் ஷேக் ரஷீத் அகமது நேற்று கூறினார்.

பஸ் விபத்தில் 20 பேர் பலி

கெய்ரோ: மத்திய கிழக்கு நாடான எகிப்தின் அசியூட் மாகாணத்தில், நேற்று முன்தினம் பயணியருடன் சென்ற பஸ், லாரியை முந்திச் செல்ல முயன்றது. அப்போது, லாரியில் மோதிய பஸ்சில் பற்றிய தீ, லாரிக்கும் பரவியது. இந்த விபத்தில், 20 பேர் கொல்லப்பட்டதுடன், மூன்று பேர் காயமடைந்தனர்.

பள்ளி குழந்தைகள் பலி

நியாமி: மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜர் தலைநகர் நியாமியில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில், நேற்று முன்தினம் திடீரென தீப்பற்றியது. இதில், 7 முதல், 13 வயதிற்கு உட்பட்ட, 20 குழந்தைகள் பரிதாபமாக பலியாயினர். தீப்பற்றியதற்கான காரணங்கள் குறித்து, அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

மூலக்கதை