தீவிரமாகவும் ரத்தம் உரைதல் பிரச்னை!: அஸ்ட்ராஜெனீகா தடுப்பு மருந்து பயன்படுத்த நிரந்தர தடை.. உலகிலேயே முதல் நாடாக டென்மார்க் அறிவிப்பு..!!

தினகரன்  தினகரன்
தீவிரமாகவும் ரத்தம் உரைதல் பிரச்னை!: அஸ்ட்ராஜெனீகா தடுப்பு மருந்து பயன்படுத்த நிரந்தர தடை.. உலகிலேயே முதல் நாடாக டென்மார்க் அறிவிப்பு..!!

கோபன்ஹேகன்: உலகிலேயே முதல் நாடாக டென்மார்க்கில் அஸ்ட்ராஜெனீகா தடுப்பு மருந்து பயன்படுத்த நிரந்தரமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. உலகில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாளுக்கு நாள் நோயாளிகளின் கொரோனாவிலிருந்து குணமாகி வீடு திரும்பினாலும் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. இதற்கு ஒரே தீர்வு கொரோனா தடுப்பு மருந்து என மருத்துவ விஞ்ஞானிகள் கூறியதை அடுத்து தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன. பொதுவாக தடுப்பு மருந்துகளை பயன்படுத்தினால் காய்ச்சல், தலைவலி, உடல் வலி, வாந்தி, உள்ளிட்டவை ஏற்படுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் ஆஸ்ட்ராஜெனிகா எனும் நிறுவனத்தின் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை பயன்படுத்தும் நபர்களில் பெரும்பாலானோருக்கு ரத்தம் உறையும் தன்மை ஏற்படுவதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில் அஸ்ட்ராஜெனீகா தடுப்பு மருந்து பயன்படுத்த டென்மார்க் நிரந்தர தடை விதித்துள்ளது. கொரோனா தடுப்பூசி போடுவதற்கு ஜான்சன் அண்ட் ஜான்சன் மற்றும் அஸ்ட்ராஜெனீகா தடுப்பு மருந்தை பயன்படுத்துவதால் ரத்தம் உரைத்தல் பிரச்னை ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. ஆனால் மிகவும் அரிதாகவே இதுபோன்ற பிரச்னை ஏற்படுவதாகவும், அமெரிக்காவில் 70 லட்சம் பேருக்கு ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி போடப்பட்டதில் 6 பேருக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையே அமெரிக்கா மற்றும் தென் ஆப்பிரிக்காவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டென்மார்க்கில் அஸ்ட்ராஜெனீகா தடுப்பு மருந்து பயன்பாடு நிரந்தரமாக நிறுத்திவைக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. எதிர்பார்த்ததை விட அதிகளவில் ரத்தம் உரைதல் பிரச்னை ஏற்படுவதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டென்மார்க்கில் ஏற்கனவே 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில், அதில் 15 சதவிகிதம் பேருக்கு அஸ்ட்ராஜெனீகா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை