இந்தியாவில் சுற்றுப் பயணம் போரிஸ் பயண நாள் குறைப்பு

தினகரன்  தினகரன்
இந்தியாவில் சுற்றுப் பயணம் போரிஸ் பயண நாள் குறைப்பு

லண்டன்: இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த ஜனவரி மாதம் குடியரசு தினவிழாவில் பங்கேற்க இந்தியா வருவதாக இருந்தது. ஆனால், இங்கிலாந்தில் கொரோனா 2வது அலை காரணமாக அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, ஏப்ரல் இறுதியில் அவர் மிகப்பெரிய சர்வதேச வர்த்தக பயணமாக இந்தியா வருவதாக அறிவிக்கப்பட்டது. தற்போது இந்தியாவில் கொரோனா 2வது அலை தீவிரமாகி இருப்பதால் போரிஸ் ஜான்சனின் இந்திய பயணம் குறைக்கப்படுவதாக அவரது செய்தித் தொடர்பாளர் நேற்று தெரிவித்துள்ளார். ஜான்சன் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் பல குறைக்கப்பட உள்ளன. இப்பயணத்தில் அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளார். அவர் வரும் 26ம் தேதி இந்தியா வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை