2 டோஸ் போட்ட பிறகும் கூட கொரோனா தாக்கும் என்றால் தடுப்பூசியை ஏன் போடணும்?... மருத்துவர்களின் விளக்க அறிக்கை

தினகரன்  தினகரன்
2 டோஸ் போட்ட பிறகும் கூட கொரோனா தாக்கும் என்றால் தடுப்பூசியை ஏன் போடணும்?... மருத்துவர்களின் விளக்க அறிக்கை

புதுடெல்லி: தடுப்பூசி மட்டுமே கொரோனாவிடம் இருந்து தப்பிக்க ஒரே வழி என்பதே சாமானிய மக்களின் தற்போதைய நம்பிக்கையாக உள்ளது. தடுப்பூசி போட்டுக் கொண்டால் கொரோனா நம்மை அண்டாது என மனதளவில் ஒரு தைரியம் வருகிறது. ஆனால், 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகும் கூட சிலருக்கு கொரோனா தொற்று ஏற்படுவதை பார்க்கும் போது அந்த நம்பிக்கை சிதைந்து போகிறது. இரண்டு டோஸ் போட்டாலும் கொரோனா வரும் என்றால் எதற்கு தடுப்பூசி போடணும்? 2 தடுப்பூசி போட்டாலும் கொரோனா தாக்கும் என்றால் தடுப்பூசியால் நமக்கு என்னதான் பலன் கிடைக்கிறது? என்பன போன்ற கேள்விகள் பலருக்குள்ளும் எழுகின்றன.இதோ அதற்கான ஓர் மருத்துவ விளக்கம்...கொரோனாவுக்கு எதிரான தற்போதைய தடுப்பூசிகள் தொற்று ஏற்படுவதிலிருந்து முழுமையாக, அதாவது 100 சதவீதம் நம்மை காக்கும் என்று சொல்ல முடியாது. தடுப்பூசி பெற்றிருந்தாலும் கூட பெரிய அறிகுறிகளற்ற தொற்று ஏற்படும் வாய்ப்பு உண்டு. ஆனால், அந்த தொற்று முற்றி தீவிர கொரோனா நோயாக மாறுவதிலிருந்து நம்மை தடுப்பூசிகள் காக்கும்.  அந்த விதத்திலேயே அவை உருவாக்கப்பட்டுள்ளன. அதாவது, 2 டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்ட சிலருக்கு கூட கொரோனா தாக்கலாம். ஆனால், அந்த தொற்று முற்றி அதற்கடுத்த நோய் நிலையாக மாறும் தன்மையைத்தான் தடுப்பூசிகள் தடுக்கின்றன. தற்போது பயன்பாட்டில் உள்ள கோவாக்சின், கோவிஷீல்டு இரண்டுக்குமே தீவிர கொரோனா நோயை தடுக்கும் திறன் உண்டு என்பது ஆய்வு முடிவுகள் மூலம் தெரிய வருகின்றது. தடுப்பூசிகளின் மூன்றாம் கட்ட மருத்துவ ஆய்வு முடிவுகளின் படி, கோவாக்சினின் நோய் தடுக்கும் திறன் 80%, கோவிஷீல்டுன் நோய் தடுக்கும் திறன் 70%. அதாவது தடுப்பூசியை ஒருவர் போட்டுக்கொண்டால் அவர் 70-80% கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கப்படுவார். அதே சமயம் 20-30% தொற்று ஏற்பட வாய்ப்பு உண்டு என்பதையே இந்த முடிவுகள் காட்டுகின்றன. கோவிஷீல்டை பொறுத்த வரையில், இரண்டாவது டோஸ் போடப்பட்ட 14 நாட்கள் கழித்தும், கோவாக்சின் 28 நாட்கள் கழித்தும் முழுமையான எதிர்ப்பு சக்தி வழங்குவதாக ஆய்வுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே 2வது தவணை எடுத்தாலும் மேற்சொன்ன கால இடைவெளிக்குள் தொற்று ஏற்படும் வாய்ப்பு உண்டு. தற்போது இந்தியாவில் இங்கிலாந்து வகை உருமாற்ற கொரோனா, தென் ஆப்ரிக்கா வகை, இந்தியாவிலேயே உருவான இரட்டை உருமாற்ற கொரோனா போன்ற பல உருமாற்றங்கள் 2ம் அலையை தீவிரப்படுத்தி உள்ளன. இந்த உருமாற்ற வகைகளுக்கு எதிராக தடுப்பூசிகளின் செயல்திறன் குறையவே வாய்ப்புண்டு. அதாவது, உலகின் ஏனைய பகுதிகளில் 70% செயல்திறனுடன் இருக்கும் அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசி , தென் ஆப்பிரிக்காவில் 22% ஆக மட்டுமே செயல்திறன் கொண்டுள்ளது. எனினும் இந்திய தடுப்பூசிகள் உருமாற்ற வைரஸ்களுக்கு எதிராகவும் சிறப்பாக வேலை செய்கின்றன என்றே பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, தடுப்பூசிகள் நம்மை கொரோனா தொற்று முற்றாமல் பாதுகாக்கக் கூடியவை. தடுப்பூசி போட்டுக் கொண்டால், பெரிய பாதிப்புகளை, உயிரிழப்புகளை தவிர்க்கலாம் என்பது மட்டுமே நிச்சயம் என்கின்றனர் மருத்துவ விஞ்ஞானிகள்.ஆவி பிடிப்பதே உகந்ததுகொரோனா காலத்திற்குப் பிறகு பலரும் ஐஸ் வாட்டரை மறந்து சுடு தண்ணீருக்கு மாறிவிட்டனர். சுடு தண்ணீர் குடிப்பதால் கொரோனா நம்மை அண்டாது என நம்புகின்றனர். ஆனால், சுடு தண்ணீரை விட ஆவி பிடிப்பதே கொரோனா ஒழிக்க உகந்தது என்கின்றனர் மருத்துவர்கள். கொரோனா வைரஸ் நமது மூக்கின் நான்கு ஜோடி காற்றுப் பைகளில் மறைந்து கொள்ளும் தன்மை கொண்டவை. அங்கிருந்து 4-5 நாட்கள் கழித்து அவை நுரையீரலை அடைந்து தாக்குகின்றன. சுடு தண்ணீர் நமது தொண்டைக்கு மட்டுமே நன்மை பயக்கும். எனவே, மூக்கின் காற்றுப் பைகளில் மறைந்திருக்கும் வைரஸ்களை அழிக்க ஆவி பிடித்தலே சிறந்தது. 50 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் வைரஸ் செயலிழந்து விடும். 60 டிகிரியில் பலவீனமடைந்து விடும். 70 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் அழிந்து விடும். எனவே, வாரத்திற்கு ஒருநாளில் காலை, மாலை இருவேளையில் ஆவி பிடிக்க வேண்டும். இதன் மூலம் வைரஸ்களை அழித்து விட முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.

மூலக்கதை