கும்பமேளா 2 வாரத்துக்கு முன்கூட்டியே நிறுத்தமா?

தினகரன்  தினகரன்
கும்பமேளா 2 வாரத்துக்கு முன்கூட்டியே நிறுத்தமா?

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் மகா கும்பமேளாவில், கங்கை நதியில் நீராட நான்கு நாட்கள் மிகவும் உகந்ததாகக் கருதப்படுகிறது. இதில், ஏற்கனவே 2 நாட்கள் முடிந்துவிட்ட நிலையில், நேற்று நீராடலுக்கு உகந்த மூன்றாவது நாளாகும். இதையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள், கங்கை நதிக்கரையில் நேற்று நீராடினர். ஏற்கனவே 2 முறை நீராடலில் பக்தர்கள் மாஸ்க் அணியாமல், சமூக இடைவெளி பின்பற்றாததால், 1086 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. நேற்றும் இந்த விதிமுறை மீறல்  நடந்தது. இதனால், 2 வாரம் முன்கூட்டியே கும்பமேளா முடிக்கப்படுவதாக வந்த தகவலை அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

மூலக்கதை