கடந்த வாரம் தடுப்பூசி; இந்த வாரம் பாதிப்பு: உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கொரோனா தொற்று உறுதி.!!!

தினகரன்  தினகரன்
கடந்த வாரம் தடுப்பூசி; இந்த வாரம் பாதிப்பு: உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கொரோனா தொற்று உறுதி.!!!

லக்னோ: உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா 2வது அலை மிகத்தீவிரமாக பரவி வருகிறது. பாதிப்பு மட்டுமின்றி பலி எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகிறது. நோய் பரவலை கட்டுப்படுத்த இருக்கக் கூடிய ஒரே வழி அதிகமானோருக்கு தடுப்பூசி போடுவது மட்டுமே. இதனால், நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணியை மத்திய அரசு விரைவுபடுத்தி உள்ளது.தடுப்பூசி போட்டுக்கொள்ளும் பணி நடைபெற்று வந்தாலும், கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துதான் வருகிறது. இதற்கிடையே, உத்தரப்பிரதேச மாநில முதல்வர் அலுவலகத்தில் மூத்த அதிகாரிகள் உள்ளிட்ட சில ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அவர் தனது டிவிட்டரில், ‘‘எனது அலுவலக ஊழியர்களுக்கு கொரோனா உறுதியானதால் முன்னெச்சரியாக தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். வீட்டிலிருந்தே டிஜிட்டல் வாயிலாக பணிகளை மேற்கொள்வேன்’’ என கூறி உள்ளார்.இந்நிலையில், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாஜக மூத்த தலைவரான யோகி ஆதித்யநாத் 5 மாநில சட்டமன்ற தேர்தல்களிலும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதனிடையே, யோகி ஆதித்யநாத்துக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது பாஜக தலைவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல் 5-ம் தேதி உத்தரபிரதேச மாநிலம் தலைநகர் லக்னோவில் உள்ள அரசு மருத்துவமனையில் முதல்வர் யோகி ஆதித்யநாத் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்திக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை