இந்திய அளவில் ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் இல்லை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

தினகரன்  தினகரன்
இந்திய அளவில் ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் இல்லை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

டெல்லி: 2020-ம் ஆண்டு நடந்தது போல இந்திய அளவில் ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் இல்லை என உலக வங்கியிடம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி அளித்துள்ளார். தற்போது பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த அரசு 5 அம்ச திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதாவது பரிசோதனை, நோய் கண்டறிதல், சிகிச்சை, தடுப்பூசி திட்டம், நோயை கட்டுப்படுத்த நடத்தை விதிமுறைகள் ஆகிய 5 அம்ச திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். இதன் மூலம் நோயை கட்டுப்படுத்திவிடலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது எனவும் கூறினார்.

மூலக்கதை