ஒரே நாளில் 1.85 லட்சம் பேருக்கு கொரோனா: 24 மணி நேரத்தில் 1,026 பேர் பலி

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஒரே நாளில் 1.85 லட்சம் பேருக்கு கொரோனா: 24 மணி நேரத்தில் 1,026 பேர் பலி

புதுடெல்லி: தினசரி பாதிப்பில் இதுவரை இல்லாத அளவாக கடந்த 24 மணி நேரத்தில் 1. 85 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாகவும், 1,026 பேர் பலியானதாகவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை ேகாரத்தாண்டம் ஆடி வரும் நிலையில், பல மாநிலங்களில் ஊரடங்குகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

பலமடங்கு தொற்று பாதிப்பு மற்றும் இறப்புகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மருத்துவ சிகிச்சை அளிக்க முடியாத அவலங்களும் ஏற்பட்டுள்ளன. இறந்தவர்களின் உடல்கள் ஆங்காங்காகே மருத்துவமனை வளாகங்களில் வீசப்பட்டு செல்வதாகவும், ேநாயாளிகளுக்கு படுக்கை வசதி கிடைக்காததால் அவர்கள் தரையில் படுத்துக் கிடங்கும் அவலமும் அரங்கேறி வருகின்றன.

உயிர்காக்கும் மருந்துகள் பற்றாக்குறை, ஆக்ஸிஜன் பற்றாக்குறை, மருத்துவ சிகிச்சை அளிக்க மருத்துவர்கள், செவிலியர்கள் பணியில் இல்லாமை என்று நோயாளிகள் பல்வேறு இன்னல்களை சந்திந்து வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையில், ‘நேற்றிரவு வரை கடந்த 24 மணி நேரத்தில் 1,85,248 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

கடந்தாண்டு தொற்று பரவிய நாளில் இருந்து தினசரி பாதிப்பு எண்ணிக்கையில், இதுதான் அதிகபட்ச பாதிப்பாகும். கடந்த 24 மணி நேரத்தில் 1,026 பேர் தொற்று பாதிப்பால் இறந்துள்ளனர்.

மகாராஷ்டிராவில் மட்டும் 281 பேர் இறந்துள்ளனர். மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,38,71,000-ஐ தாண்டியும், மொத்த இறப்பு எண்ணிக்கை 1,72,115 ஆகவும் உயர்ந்துள்ளது.

இருப்பினும், நேற்று மட்டும் 82,231 பேர் குணமடைந்துள்ளனர்.

சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 13. 60 லட்சமாக அதிகரித்துள்ளது’ என்று தெரிவித்துள்ளது.   இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆர்) வெளியிட்ட புள்ளிவிபரபடி, கொரோனா தொற்று இருப்பதைக் கண்டறிய நேற்று மட்டும் 14 லட்சத்திற்கும் மேற்பட்ட மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.

இதுவரை மொத்தம் 25. 92 கோடிக்கும் அதிகமான மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இதுவரை 10. 85 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

நேற்று மட்டும் சுமார் 40 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

.

மூலக்கதை