பென் ஸ்டோக்ஸ் விலகல் | ஏப்ரல் 13, 2021

தினமலர்  தினமலர்
பென் ஸ்டோக்ஸ் விலகல் | ஏப்ரல் 13, 2021

மும்பை: கைவிரலில் ஏற்பட்ட காயத்தால் ராஜஸ்தானின் பென் ஸ்டோக்ஸ் ஐ.பி.எல்., தொடரில் இருந்து விலகினார்.

மும்பையில் நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் பஞ்சாப் வீரர் கிறிஸ் கெய்ல் துாக்கி அடித்த பந்தை ராஜஸ்தான் ‘ஆல்–ரவுண்டர்’ பென் ஸ்டோக்ஸ் ‘டைவ்’ அடித்து பிடித்தார். அப்போது ஸ்டோக்சின் இடது கை ஆள்காட்டி விரலில் காயம் ஏற்பட்டது. இதனால் இவர், ஐ.பி.எல்., தொடரில் இருந்து விலகினார். ஏற்கனவே ஜோப்ரா ஆர்ச்சர் இல்லாத நிலையில் தற்போது ஸ்டோக்ஸ் விலகி இருப்பது ராஜஸ்தான் அணிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. இவருக்கு பதிலாக டேவிட் மில்லர் அல்லது லியாம் லிவிங்ஸ்டன் களமிறக்கப்படலாம்.

மூலக்கதை