தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க அதிபர்

தினமலர்  தினமலர்
தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க அதிபர்

வாஷிங்டன்: தமிழ், பெங்காலி, நேபாளி உள்ளிட்ட பல்வேறு தரப்பு மக்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் புத்தாண்டு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

உலகில் உள்ள தமிழர்கள் அனைவரும், இன்று (ஏப்.,14) தமிழ் புத்தாண்டை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். தமிழர்கள் மட்டுமின்றி கேரளாவில் விஷூ வருடப்பிறப்பும் கொண்டாடப்படுகிறது. அதேபோல், தென் ஆசியா மற்றும் தென் கிழக்கு ஆசியாவில் உள்ள மக்கள் அவரவர் மொழிகளில் தங்கள் பாரம்பரிய புத்தாண்டை கொண்டாடுகின்றனர்.

இந்நிலையில், புத்தாண்டு கொண்டாடும் அனைத்து தரப்பு மக்களுக்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது டுவிட்டர் பதிவு: வைஷாகி, நவராத்திரி, சாங்ரன் மற்றும் வரும் வாரத்தில் புத்தாண்டு கொண்டாடும் தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசிய சமூக மக்களுக்கு நானும் ஜுல்லும் (பைடனின் மனைவி) வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம். இனிய பெங்காலி, கம்போடியன், லியோ, மியான்மரிஸ், நேபாளி, சின்ஹலிசி, தமிழ், தாய் (தாய்லாந்து), விஷூ புத்தாண்டு வாழ்த்துகள். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

மூலக்கதை