உலகளவில் கொரோனா பாதிப்பு 13.80 கோடியை தாண்டியது: இதுவரை 29 லட்சம் பேர் பலி; 11.10 கோடி பேர் குணம்..!!!!

தினகரன்  தினகரன்
உலகளவில் கொரோனா பாதிப்பு 13.80 கோடியை தாண்டியது: இதுவரை 29 லட்சம் பேர் பலி; 11.10 கோடி பேர் குணம்..!!!!

ஜெனீவா : உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13.80 கோடியை தாண்டி உள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 13,80,06,592 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 11,10,27,339 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 29 லட்சத்து 71 ஆயிரத்து 232 பேர் உயிரிழந்துள்ளனர்.கொரோனா தொற்றுக்கு தற்போது 2,40,08,021 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,04,875 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் விவரம்:-அமெரிக்கா - 3,20,70,784இந்தியா- 1,38,71,321பிரேசில்- 1,36,01,566பிரான்ஸ்- 51,06,329ரஷ்யா- 4,657,883இங்கிலாந்து  - 4,375,814துருக்கி      - 3,962,760இத்தாலி     - 3,793,033ஸ்பெயின்   - 3,376,548 கொரோனாவால் அதிகம் பேர் உயிரிழந்த நாடுகளின் விவரம்:-அமெரிக்கா - 5,77,179பிரேசில்- 3,58,718மெக்சிகோ- 2,09,702 இந்தியா- 1,72,115 இங்கிலாந்து  - 1,27,123     கொரோனாவால் அதிகம் பேர் குணமடைந்த நாடுகளின் விவரம்:-அமெரிக்கா-24,626,410இந்தியா- 12,332,688பிரேசில்- 12,074,798ரஷ்யா-4,281,776இங்கிலாந்து- 3,992,416    

மூலக்கதை