யாருக்கெல்லாம் தடுப்பு மருந்தால் ரத்த உறைவு ஏற்படுகிறது?

தினமலர்  தினமலர்
யாருக்கெல்லாம் தடுப்பு மருந்தால் ரத்த உறைவு ஏற்படுகிறது?

உலகம் முழுவதும் தற்போதைய கொரோனா வைரஸின் இரண்டாவது அலை அதிகரித்துவரும் நிலையில் பல நாடுகளில் தடுப்பு மருந்து விநியோகம் அதிகரித்துள்ளது.


பக்கவிளைவுகள்


பிரிட்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலை தயாரிப்பில் உருவான ஆஸ்ட்ராசெனேகா மற்றும் அமெரிக்காவின் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பு மருந்துகளில் சில பக்க விளைவுகள் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் தடுப்பு மருந்து ஊசி செலுத்திக்கொண்ட சிலருக்கு ரத்த நாளங்களில் ரத்த உறைவு ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதற்கான காரணம் குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.

தற்காலிக நிறுத்தம்ரத்தத்தில் உள்ள பிளாட்டிலெட் அளவு தடுப்பு மருந்தின் வீரியத்தால் குறைவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதன்காரணம் குறித்து தற்போது ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர். ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பு மருந்துக்கு அமெரிக்காவின் நோய் தடுப்பு அமைப்பு ஏற்கனவே அங்கீகாரம் அளித்து இருந்த நிலையில் தற்போது அதன்மீது எழுந்த குற்றச்சாட்டு காரணமாக ஐரோப்பிய நாடுகளில் அதன் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

'செரிப்ரல் வெனஸ் சைனஸ் த்ரோம்போசிஸ்' எனப்படும் ரத்த உறைவு ஆஸ்ட்ராசெனேகா மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பு மருந்துகளை செலுத்துவதால் வெகுசிலருக்கு ஏற்படுகிறது. இந்த வகையில் ஏற்படும் ரத்த உறைவு மிகவும் அரிதானது என்று ஐரோப்பிய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.

வெகு சிலருக்கு மட்டுமே இவ்வாறான ரத்த உறைதல் ஏற்பட்டு அது மரணத்தை ஏற்படுத்துமே தவிர அனைவருக்கும் இது பாதிப்பை ஏற்படுத்தாது என கூறியுள்ளனர் விஞ்ஞானிகள். கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி வரை 68 லட்சம் டோஸ் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பு மருந்துகள் அமெரிக்க குடிமக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.

இவர்களுள் 18 முதல் 45 வயதுக்கு உட்பட்ட ஆறு பெண்களுக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு 6 முதல் 13 நாட்களில் ரத்த உறைவு ஏற்பட்டு உள்ளது.ஐரோப்பிய நாடுகளிலும் 60 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.முதல் டோஸ் தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட இரண்டு வாரங்களில் இரத்த உறைவு ஏற்படுகிறது.

அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் ரத்த உறைவைத் தடுக்க வெவ்வேறு விதமான மருத்துவ முறைகள் மருத்துவ விஞ்ஞானிகளால் கையாளப்படுகின்றன.எனவே ரத்த உறைவைத் தடுக்க ஒரே மாதிரியான சிகிச்சை அனைத்து நாடுகளிலும் கடைபிடிக்கப்படுவதில்லை என்பது இதமூலமாகத் தெளிவாகிறது.


விரைவில் தீர்வுஇதுகுறித்து ஆஸ்ட்ராசெனேகா மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனர்கள் கூறுகையில் வெகு சிலருக்கு ஏற்படும் அரிய வகை ரத்த உறைவைத் தடுக்க தனிநபரின் மருத்துவ ஆய்வு முடிவுகளை தீவிரமாக ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். இதற்கான தீர்வு விரைவில் கிடைக்க தங்களது நிறுவன விஞ்ஞானிகள் முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

மூலக்கதை