அமெரிக்க பல்கலைகளுடன் இணைந்து செயல்பட திட்டம்

தினமலர்  தினமலர்
அமெரிக்க பல்கலைகளுடன் இணைந்து செயல்பட திட்டம்

வாஷிங்டன் : இந்திய மாணவர்களின் உயர் கல்விக்காக அமெரிக்க பல்கலைகளுடன் இணைந்து செயல்படுவதற்கான நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த தீவிர முயற்சி மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த சில மாதங்களாக அமெரிக்காவிற்கான இந்திய துாதர் தரன்ஜித் சாந்து அங்குள்ள பல பல்கலைகளின் நிர்வாகங்களுடன் பல்வேறு துறைகளில் இணைந்து செயல்படுவது குறித்து பேச்சு நடத்தி வருகிறார்.சமீபத்தில் அரிசோனா ஹாவர்டு புளோரிடா உள்ளிட்ட பல்கலைகளில் உயர் கல்வித் துறையில் இந்திய - அமெரிக்க கூட்டுறவு தொடர்பான கருத்தரங்கில் பங்கேற்று பேசினார்.

இந்நிலையில் அமெரிக்காவின் வடக்கு கரோலினா பல்கலையில் தரன்ஜித் சாந்து பேசியதாவது:

இந்தியாவில் இருந்து இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் அமெரிக்க பல்கலைகளில் பயின்று வருகின்றனர்.'ஸ்டெம்' எனப்படும் அறிவியல் தொழில்நுட்பம் பொறியியல் கணிதவியல் ஆகிய பிரிவுகளில் அதிக அளவிலான மாணவர்களை இந்தியா அனுப்பி வருகிறது.அதனால் உயர் கல்வித் துறையில் அமெரிக்க பல்கலைகளுடன் கூட்டாக செயல்பட ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.

அவற்றில் மாணவர்களை பரஸ்பரம் பரிமாறிக் கொள்வது வலைதளத்தில் கல்வி போதிப்பது இந்திய - அமெரிக்க பல்கலைகள் இடையே ஒப்பந்தம் மேற்கொள்வது என ஒரு சிலவற்றை குறிப்பிடலாம்.கூட்டு ஆராய்ச்சிஇதில் வடக்கு கரோலினா பல்கலை முன்னணியில் நிற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2020ம் ஆண்டின் தேசிய கல்விக் கொள்கைப்படி இந்திய - அமெரிக்க பல்கலைகள் இணைந்து பட்டம் வழங்குதல் இரட்டை பட்டப் படிப்பு கூட்டு ஆராய்ச்சி உள்ளிட்டவை நடைமுறையில் உள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.

மூலக்கதை