கொரோனா தடுப்பு, தடுப்பூசி விழிப்புணர்வு குறித்து ஆளுநர்களுடன் பிரதமர் நாளை ஆலோசனை: துணை ஜனாதிபதியும் பங்கேற்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
கொரோனா தடுப்பு, தடுப்பூசி விழிப்புணர்வு குறித்து ஆளுநர்களுடன் பிரதமர் நாளை ஆலோசனை: துணை ஜனாதிபதியும் பங்கேற்பு

புதுடெல்லி: கொரோனா பரவல் தடுப்பு, தடுப்பூசி விழிப்புணர்வு குறித்து மாநில ஆளுநர்களுடன் துணை ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் நாளை ஆலோசனை நடத்தவுள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், மற்றொரு பக்கம் ெகாரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

சில மாநிலங்களில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துதல் மற்றும் தடுப்பூசி போடுதலை தீவிரப்படுத்துதல் தொடர்பாக மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் முதல் தடுப்பூசி திருவிழா என்ற பெயரில் சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு 45 வயதுக்கு மேற்பட்ட மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகின்றன.

மகாராஷ்டிரா, ஒடிசா போன்ற மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் அம்மாநிலங்களில் சிறப்பு மையங்கள் மூலம் தடுப்பூசி திருவிழாக்கள் நடத்தப்படவில்லை.

குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், கொரோனா பரவல் சூழ்நிலைகளைக்  கருத்தில் கொண்டு துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு மற்றும் பிரதமர்  மோடி ஆகியோர் நாளை (ஏப்.

14) பல்வேறு மாநில ஆளுநர்களுடன்  ஆலோசனை மற்றும் கலந்துரையாடல் நடத்த உள்ளனர்.

அப்போது நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக ஏற்படும் பாதிப்புகள், அதற்காக மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுதல் குறித்து ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

கொ ரோனா தடுப்பு நடவடிக்கைகளை  பொதுமக்கள் கடைப்பிடிப்பதில் அலட்சியமாக இருப்பதால், மக்களிடையே  விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தகுதியுள்ள மக்களுக்கு தடுப்பூசி போட  ஊக்குவிக்கவும் ஆலோசிக்கப்பட உள்ளது. மேலும், சமூகத்தின் பல்வேறு  பிரமுகர்களை ஒருங்கிணைத்து கொரோனா தடுப்பு விழிப்புணர்வு, தடுப்பூசி  போடுதலை ஊக்கப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாநில முதல்வர்கள் அளவில் ஆலோசனைகள் நடத்தப்பட்ட நிலையில், தற்போது முதன்முறையாக ஆளுநர்களின் கூட்டத்தில் துணை குடியரசு தலைவர், பிரதமர் ஆகியோர் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை