அமெரிக்கா, பிரேசில், இந்தியா ருத்ரதாண்டவம்.. விடாமல் அதிகரிக்கும் கொரோனா கேஸ்கள் : திகைக்கும் உலக நாடுகள்!!

தினகரன்  தினகரன்
அமெரிக்கா, பிரேசில், இந்தியா ருத்ரதாண்டவம்.. விடாமல் அதிகரிக்கும் கொரோனா கேஸ்கள் : திகைக்கும் உலக நாடுகள்!!

ஜெனீவா, உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13.66 கோடியை தாண்டி உள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 13,66,27,339 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 10,98,56,799 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 29 லட்சத்து 49 ஆயிரத்து 142 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 2,38,21,398 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,03,369 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-அமெரிக்கா  -  பாதிப்பு- 3,19,18,591, உயிரிழப்பு -  5,75,829, குணமடைந்தோர் - 2,44,80,522இந்தியா   -   பாதிப்பு- 1,35,25,364, உயிரிழப்பு -  1,70,209, குணமடைந்தோர் -  1,21,53,699பிரேசில்   -   பாதிப்பு- 1,34,82,543, உயிரிழப்பு -  3,53,293, குணமடைந்தோர் -  1,18,80,803பிரான்ஸ்  -   பாதிப்பு -  50,58,680, உயிரிழப்பு -   98,750, குணமடைந்தோர் -    3,09,787ரஷ்யா      - பாதிப்பு -  46,41,390, உயிரிழப்பு -   1,02,986, குணமடைந்தோர் -  42,65,509தொடர்ந்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் விவரம்:-இங்கிலாந்து  - 43,69,775துருக்கி      - 38,49,011இத்தாலி     - 37,69,814ஸ்பெயின்   - 33,47,512ஜெர்மனி    - 30,09,541போலந்து    - 25,74,631கொலம்பியா - 25,36,198அர்ஜெண்டினா- 25,32,562மெக்சிக்கோ  - 22,78,420ஈரான்       - 20,70,141

மூலக்கதை