கேரள முதல்வரின் உடல்நிலை திருப்தி

தமிழ் முரசு  தமிழ் முரசு
கேரள முதல்வரின் உடல்நிலை திருப்தி

திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கடந்த 8ம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் கோழிக்கோடு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆனால் முதல்வரின் மனைவி கமலாவுக்கு தொற்று பாதிப்பு இல்லை.

இந்த நிலையில் முதல்வர் பினராயி விஜயனுக்கு சிகிச்சை அளிக்க 10 பேர் அடங்கிய மருத்துவ குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் பினராயி விஜயனுக்கு சிறப்பான சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மேலும் முதல்வரின் உடல்நிலை திருப்திகரமாக இருப்பதாக மருத்துவ குழு தெரிவித்துள்ளது.




.

மூலக்கதை