கொரோனா பாதிப்பு தடுப்பு குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் நாளை ஆலோசனை

தமிழ் முரசு  தமிழ் முரசு
கொரோனா பாதிப்பு தடுப்பு குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் நாளை ஆலோசனை

சென்னை: கொரோனா 2ம் அலை வேகமாக பரவி வருவதை அடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவியதையடுத்து கடந்த ஆண்டு மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு பல்வேறு தடுப்பு நடவடிக்கைள் எடுக்கப்பட்டதையடுத்து கொரோனா தொற்று பாதிப்பு கொஞ்சம், கொஞ்சமாக குறைய தொடங்கியது.

இதையடுத்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து மக்களின் இயல்வு வாழ்க்கை திரும்பியது.

கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பாதிப்பு எண்ணிக்ைக 500க்குள் இருந்தது.

இந்த நிலையில் கொரோனா 2ம் அலை இந்தியா முழுவதும் வேகமாக பரவியது. தமிழகத்தில் பிப்ரவரி மாத இறுதியில் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது.

அதன்பிறகு மார்ச் மாதத்தில் 1500யை தாண்டியது. அவ்வாறு தொடர்ந்து நாளுக்குநாள் அதிகரித்து வந்த நிலையில் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

இந்நிலையில் ஏப்ரல் மாதத்தில் பாதிப்பு எண்ணிக்கை குறையும் என்று எதிர்ப்பார்த்த நிலையில் மார்ச் மாதத்தை விட பாதிப்பு எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகமானது.

நாள்தோறும் 5 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளுடன் நேற்று முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை மதியம் 12 மணிக்கு தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

அமைச்சர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசனையில் பங்கேற்க உள்ளனர்.

ஆலோசனைக்கு பிறகு முக்கிய முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

.

மூலக்கதை