பாப்டே தலைமையிலான 'கொலீஜியம்' கூடி விவாதம்

தினமலர்  தினமலர்
பாப்டே தலைமையிலான கொலீஜியம் கூடி விவாதம்

புதுடில்லி : உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, எஸ்.ஏ.பாப்டே தலைமையில், ஏற்கனவே திட்டமிடப்பட்ட 'கொலீஜியம்' கூட்டம், நேற்று நடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளை நியமிப்பது தொடர்பாக, ஐந்து உறுப்பினர்கள் அடங்கிய உச்ச நீதிமன்ற கொலீஜியம் கூடி விவாதித்து, நீதிபதிகளின் பெயர்களை பரிந்துரைப்பது வழக்கம்.

ஓய்வுஇந்த கொலீஜியத்துக்கு, தலைமை நீதிபதி, பாப்டே தலைமை வகிக்கிறார். நீதிபதிகள் என்.வி.ரமணா, ஆர்.எப்.நாரிமன், யு.யு.லலித், ஏ.எம்.கான்வில்கர் ஆகியோர் கொலீஜியத்தில் இடம் பெற்றுள்ளனர்.கடந்த, 2019, நவம்பரில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற, பாப்டே வரும், 23ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். பாப்டே பரிந்துரையின்படி, புதிய தலைமை நீதிபதியாகரமணாவை நியமித்து, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், சமீபத்தில் உத்தரவிட்டார்.உச்ச நீதிமன்றத்தில் மொத்தம், 34 நீதிபதிகளை நியமிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில், நீதிபதி இந்து மல்கோத்ரா ஓய்வு பெற்றதை அடுத்து, ஐந்து நீதிபதிகளுக்கான பணியிடங்கள் உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ளன.

ஒருமித்த கருத்துஇந்நிலையில், புதிய நீதிபதிகள் நியமனம் தொடர்பாக, கடந்த மாதம் நடந்த கொலீஜியம் கூட்டத்தில், ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை.இதையடுத்து, பாப்டே தலைமையிலான கொலீஜியம் கூட்டத்துக்கு ஏற்கனவே திட்டமிடப்பட்டு இருந்தது. அதன்படி, நேற்று கூட்டம் நடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

மூலக்கதை