ஸ்ரேயாசுக்கு ‘ஆப்பரேஷன்’ | ஏப்ரல் 08, 2021

தினமலர்  தினமலர்
ஸ்ரேயாசுக்கு ‘ஆப்பரேஷன்’ | ஏப்ரல் 08, 2021

மும்பை: தோள்பட்டை காயத்துக்கு ‘ஆப்பரேஷன்’ செய்து கொண்டார் ஸ்ரேயாஸ் ஐயர்.

இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் 26. இங்கிலாந்துக்கு எதிரான புனே ஒருநாள் போட்டியில் (மார்ச் 23), பந்தை ‘பீல்டிங்’ செய்த போது, விளம்பர பலகையின் மீது மோதியதில், இடது தோள்பட்டை விலகியது. இங்கிலாந்து தொடர், 14வது ஐ.பி.எல்., சீசனில் இருந்து விலகினார். இவருக்குப் பதில் ரிஷாப் பன்ட், டில்லி அணி கேப்டன் ஆனார். 

இந்நிலையில் மும்பை மருத்துவமனையில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு நேற்று ஆப்பரேஷன் செய்யப்பட்டது. பாட்மின்டன் வீராங்கனைகள் சிந்து, செய்னா நேவல், பல்வேறு கிரிக்கெட் வீரர்களுக்கு சிகிச்சை தந்த, எலும்பு அறுவை சிகிச்சை நிபுணர் தின்ஷா பார்டிவாலா, இவருக்கு ஆப்பரேஷன் செய்தார்.

மீண்டும் எப்போது

கடந்த 2020 ஐ.பி.எல்., தொடரில் ஸ்ரேயாஸ் இடது தோளில் முதன் முதலில் காயம் ஏற்பட்டது. ஆஸ்திரேலிய தொடரில் சற்று அதிகமானது. பின் இதிலிருந்து சற்று மீண்ட நிலையில் மறுபடியும் காயம் ஏற்பட்டது. வேறு வழியின்றி தற்போது ஆப்பரேஷன் செய்துள்ளார். இந்தியாவில் நடக்கவுள்ள (வரும் அக்.,–நவ.,) ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடருக்குள் தயாராகி விடுவார் என நம்பப்படுகிறது.

மூலக்கதை