கடலில் கர்ணனுக்கு கட்-அவுட் வைத்த தனுஷ் ரசிகர்கள்.; வெறித்தனம் வேற லெவல்

FILMI STREET  FILMI STREET

கலைப்புலி தாணு தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ’கர்ணன்’.

சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான இப்பட பாடல்களும் ’கர்ணன்’ டீசரும் பெரும் வரவேற்பை பெற்றது.

நீண்ட நாட்களுக்கு பிறகு தனுஷ் படம் ரிலீசாவதால் ‘கர்ணன்’ படத்திற்கு ஏதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

இந்த நிலையில், ‘கர்ணன்’ நாளை ஏப்ரல் 9ல் ரிலீசாகிறது.

இதனையடுத்து புதுச்சேரியில் தனுஷ் ரசிகர்கள் நடுக்கடலில் படகில் சென்று ‘கர்ணன்’ கட் அவுட்டை வைத்து அந்த பகுதி மக்களை ஆச்சர்யப்பட வைத்துள்ளனர்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Dhanush fans holding Karnan banner in the middle of sea

மூலக்கதை