ஏ ஆர் ரஹ்மான் தயாரித்துள்ள முதல் பட ’99 சாங்ஸ்’ பரிசுப்போட்டி.; ஜெயிச்சா வேற லெவல் சான்ஸ்.!

FILMI STREET  FILMI STREET

தனது முதல் தயாரிப்பான 99 சாங்ஸ் வெளியீட்டுக்கு தயாராகி வரும் நிலையில், பரவசமூட்டும் போட்டி ஒன்றை இசை ரசிகர்களுக்காக ஏ ஆர் ரஹ்மான் அறிவித்துள்ளார்.

இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்..

“99 சாங்ஸ் திரைப்படத்தின் பாடல்களில் தங்களுக்கு மிகவும் பிடித்த பாடலை ரசிகர்கள் தேர்ந்தெடுத்து, அதை அவர்கள் பாடி பதிவு செய்து அனுப்பலாம் என்று கூறியுள்ளார்.

போட்டியில் பங்கேற்பவர்கள், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பாடலை பதிவு செய்து, அதை யூடியூப் அல்லது இன்ஸ்டாகிராமில் #99SongsCoverStar எனும் ஹேஷ்டாகை பயன்படுத்தி பதிவேற்ற வேண்டும். ரஹ்மானையும் (@arrahman) அவர்கள் டேக் செய்ய வேண்டும்.

பத்து வெற்றியாளர்கள் ஏ ஆர் ரஹ்மானையும், 99 சாங்ஸ் குழுவினரையும் காணொலி மூலம் சந்தித்து உரையாடும் வாய்ப்பை பெறுவார்கள்.

அதோடு, ஒரு வெற்றியாளருக்கு ஏ ஆர் ரஹ்மானோடு இணைந்து பணியாற்றும் மாபெரும் வாய்ப்பு வழங்கப்படும்.

இணைப்பு: https://twitter.com/arrahman/status/1379853398170726401?s=19

சமூக வலைதளங்களில் உள்ள ரசிகர்கள் மற்றும் கலைஞர்களை இந்த அறிவிப்பு உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. தங்களது பாடல் பதிவுகளை பலரும் அனுப்பி வருகின்றனர்.

2021 ஏப்ரல் 16 அன்று தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் இந்தியா முழுவதும் ‘99 சாங்ஸ்’ வெளியாகிறது.

ஜியோ ஸ்டூடியோஸால் வெளியிடப்படவுள்ள இத்திரைப்படத்தை ஏ ஆர் ரஹ்மானின் தயாரிப்பு நிறுவனமான ஒய் எம் மூவிஸ் ஐடியல் என்டெர்டைன்மென்டுடன் இணைந்து தயாரித்துள்ளது.

AR Rahman announces a contest for all music lovers to celebrate 99 Songs

மூலக்கதை