வங்கி சாரா நிதி துறைக்கு ‘பிட்ச் ரேட்டிங்ஸ்’ எச்சரிக்கை

தினமலர்  தினமலர்
வங்கி சாரா நிதி துறைக்கு ‘பிட்ச் ரேட்டிங்ஸ்’ எச்சரிக்கை

புதுடில்லி:‘கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் இடர்பாடுகளை சந்திக்க நேரலாம்’ என, தர நிர்ணய நிறுவனமான, ‘பிட்ச் ரேட்டிங்ஸ்’ எச்சரித்துள்ளது.

இது குறித்து, இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:நடப்பு, 2021 – 22ம் நிதிஆண்டில், வங்கி சாரா நிதி நிறுவனங்கள், 12.8 சதவீத வளர்ச்சி காணும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. தற்போது கொரோனா மீண்டும் தலை துாக்கியுள்ளதால், இந்த வளர்ச்சியில் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 14 சதவீத பங்களிப்பை வழங்கும், மஹாராஷ்டிராவிலும், 16 சதவீத பங்களிப்பை வழங்கும், குஜராத், பஞ்சாப், டில்லி, சத்தீஸ்கர் மாநிலங்களிலும், கொரோனா காரணமாக, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது, நீட்டிக்கப் படும் பட்சத்தில், குறு, சிறு,நடுத்தர நிறுவனங்கள், வர்த்தக வாகன ஓட்டுனர்கள், நுண்கடன் நிறுவனங்கள் பாதிக்கப்படலாம். வங்கி சாரா நிதி நிறுவனங்கள் பணப்புழக்க பற்றாக்குறையை சந்திக்க நேரலாம்.

இத்தகைய இடர்பாடுகளை சமாளிப்பதற்கான உத்திகளை, வங்கி சாரா நிதி நிறுவனங்கள் வகுத்துக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை