25 லட்சம் சிறிய நிறுவனங்கள் வணிகத்திற்கு அமேசான் உதவி

தினமலர்  தினமலர்
25 லட்சம் சிறிய நிறுவனங்கள் வணிகத்திற்கு அமேசான் உதவி

புதுடில்லி:இந்தியாவில், 25 லட்சம் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், வலைதளம் மூலம் அவற்றின் தயாரிப்புகளை விற்க உதவி செய்துள்ளதாக, அமேசான் இந்தியா நிறுவனம் தெரிவித்து உள்ளது.

ஏற்றுமதி

கடந்த ஆண்டு, அமேசான் நிறுவனம், ஒரு கோடி குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், வலைதளம் மூலம் பொருட்களை விற்பனை செய்யும் திட்டத்திற்கு, 7,500 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என, அறிவித்திருந்தது.

இது குறித்து, அமேசான் இந்தியா நிறுவனத்தின் மூத்த துணை தலைவர், அமித் அகர்வால் கூறியதாவது:கடந்த, 2020 ஜன., முதல், 2.50 லட்சத்திற்கும் மேற்பட்ட புதிய விற்பனையாளர்கள் அமேசான் உடன் இணைந்து, வலைதளத்தில் பொருட்களை விற்கத் துவங்கிஉள்ளனர். இவர்களில் மூன்றில் ஒரு பங்கினர், தமிழ், கன்னடம், ஹிந்தி, மராத்தி என, உள்ளூர் மொழிகளில் வியாபார ஒப்பந்தம் செய்துள்ளனர்.

கடந்த ஆறு மாதங்களில், வலைதள மளிகை வியாபாரிகள் எண்ணிக்கை, 10 மடங்கு உயர்ந்துள்ளது. 22 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்யவும், 25 லட்சம் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், வலைதளத்தில் வணிகம் புரியவும், அமேசான் உதவியுள்ளது.

வேலைவாய்ப்பு

இது, வரும், 2025க்குள், ஒரு கோடியாக உயரும். அதுபோல, 70 ஆயிரம் ஏற்றுமதியாளர் களையும், கடந்த ஆண்டு வரை, 7 லட்சம் வேலைவாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளது. கொரோனா காலத்தில், கூடுதலாக, 3 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கி, 10 லட்சமாக உயர்த்தி உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை