சிவகார்த்திகேயன் பட வில்லனை கமலுக்கு வில்லனாக்கும் லோகேஷ் கனகராஜ்.?

FILMI STREET  FILMI STREET
சிவகார்த்திகேயன் பட வில்லனை கமலுக்கு வில்லனாக்கும் லோகேஷ் கனகராஜ்.?

உலகநாயகன் கமலின் 232வது படமாக உருவாகுகிறது ‘விக்ரம்’.

மாநகரம், கைதி, மாஸ்டர் படங்களை தொடர்ந்து இந்த படத்தை டைரக்டு செய்கிறார் லோகேஷ் கனகராஜ்.

கமல்ஹாசனே தன் ராஜ்கமல் பிலிம்ஸ் பேனரில் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார்

‘விக்ரம்’ படத்தில் நடிக்கும் இதர நடிகர் நடிகை தேர்வு நடந்து வருகிறது.

இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்

இத்தகவலை பஹத் பாசிலே சமீபத்திய பேட்டி ஒன்றில் உறுதிப்படுத்தி இருந்தார்.

சில மாதங்களுக்கு முன் கமல்ஹாசனுக்கு வில்லனாக நடிக்க ராகவா லாரன்சிடம் ஏற்கனவே பேசி வந்தனர்.

இந்த நிலையில் பகத் பாசிலும் படத்தில் இணைந்துள்ளதால் அவர் வில்லனாக நடிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

ஏற்கனவே சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படத்திலும் ஒரு தெலுங்கு படமொன்றிலும் வில்லனாக நடித்து வருகிறார் பகத்.

லோகேஷின் முந்தைய மாஸ்டர் படத்தில் விஜய்க்கு இணையான வில்லன் ரோலில் விஜய்சேதுபதி நடித்திருந்தார் குறிப்பிடத்தக்கது.

ஆரம்பிக்கலாங்களா? என கமலுடன் இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் லோகேஷ் பகிர்ந்து உள்ளார்.

எனவே விரைவில் இப்பட சூட்டிங் தொடங்கும் என எதிர்ப்பார்க்கலாம்.

Sivakarthikeyan film villain is part of Kamal’s Vikram

மூலக்கதை