ஐபிஎல் விளம்பரத்தில் குக் வித் கோமாளி பிரபலங்கள்

தினமலர்  தினமலர்
ஐபிஎல் விளம்பரத்தில் குக் வித் கோமாளி பிரபலங்கள்

விஜய் டிவியின் நட்சத்திர நிகழ்ச்சி குக் வித் கோமாளி. சாதாரண ஒரு சமையல் நிகழ்ச்சி ரீமேக் செய்யும அளவிற்கு பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதில் பங்கேற்றவர்கள் சினிமாவிலும் நடிக்கத் தொடங்கி விட்டார்கள்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற புகழ், அஷ்வின், மணிமேகலை உள்ளிட்டவர்கள் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி விளம்பரத்தில் நடித்திருக்கிறார்கள். முன்னணி நடிகர் நடிகைகள் மட்டுமே நடித்து வந்த இந்த விளம்பரத்தில் குக் வித் கோமாளி பிரபலங்கள் நடித்திருப்பது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விளம்பரங்கள் உலகம் முழுக்க செல்லும் என்பதால் இவர்களின் புகழ் இன்னும் உயரும். விளம்பர படப்பிடிப்பில் எடுத்த போட்டோக்கள் தற்போது இணையத்தில் பதிவிட்டுள்ளனர். அது தற்போது வைரல் ஆகி வருகின்றன. இந்த விளம்பர படத்தில் நடிக்க ஒவ்வொருவருக்கும் திருப்திகரமான சம்பளமாக வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

மூலக்கதை