மாயவன் 2ம் பாகம் தயாராகிறது

தினமலர்  தினமலர்
மாயவன் 2ம் பாகம் தயாராகிறது

4 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த படம் மாயவன். திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் சி.வி.குமார் தயாரித்து, இயக்கி இருந்தார். சந்தீப் கிஷன், லாவண்யா திரிபாதி, ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி, மைம்கோபி, பகவதி பெருமாள் உள்பட பலர் நடித்திருந்தார்கள். ஜிப்ரான் இசை அமைத்திருந்தார், கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

தடயமே இல்லாமல் அடுத்தடுத்து கொலை செய்யும் ஒரு சைக்கோ கில்லரை தேடி கண்டுபிடிக்கும் ஒரு இளம் போலீஸ் அதிகாரியின் கதை. தற்போது இதன் இரண்டாம் பாகம் மாயவன் ரீலோடட் என்ற பெயரில் தயாராக இருக்கிறது. இதையும் சி.வி.குமாரே தயாரித்து, இயக்குகிறார்.

"மாயவனை மீண்டும் உருவாக்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம். மாயவன் ரீலோடட் என்ற பெயரில் மாயவனின் சீக்குவல் தயாராகிறது. ரசிகர்களின் நிபந்தனையற்ற ஆதரவும், பாராட்டுமே இதற்கு காரணம். படம் பற்றிய முழு தகவல்களும் ஏப்ரல் 14ந் தேதி அன்று வெளியிடப்படும்". என்று தயாரிப்பு நிறுவனத்தின் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.

மூலக்கதை