முன்னாள் அமைச்சர் தேஷ்முக் மனு தள்ளுபடி

தினமலர்  தினமலர்
முன்னாள் அமைச்சர் தேஷ்முக் மனு தள்ளுபடி

மஹாராஷ்டிரா மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மீதான புகார் குறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு, மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து, அனில் தேஷ்முக் சார்பிலும், மஹாராஷ்டிரா அரசு சார்பிலும், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.நீதிபதி, எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு முன், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமர்வு உத்தரவிட்டதாவது: இந்த விவகாரத்தில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தீவிரமானவை. அதுவும், உயர் போலீஸ் அதிகாரி ஒருவர், மூத்த அமைச்சர் மீது கூறியுள்ளார். அவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

இந்த நிலையில், சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்டதில் எந்த தவறும் இல்லை. சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடும், மும்பை உயர் நீதிமன்ற உத்தரவில் தலையிட விரும்பவில்லை. இந்த இரண்டு மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன.
இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு, மஹாராஷ்டிர அரசுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இது அரசியல் ரீதியிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்
பார்க்கப்படுகிறது.

மூலக்கதை