5942 கிமீ சைக்கிள் பயணம் ராணுவ அதிகாரி 2 கின்னஸ் சாதனை

தினகரன்  தினகரன்
5942 கிமீ சைக்கிள் பயணம் ராணுவ அதிகாரி 2 கின்னஸ் சாதனை

புதுடெல்லி:  இந்திய ராணுவத்தில் லெப்டினென்ட் கர்னலாக பணி்யாற்றுபவர்  பாரத் பனனு.  இவர் 2 உலக கின்னஸ் சாதனையை புரிந்துள்ளார்.  இவர் கடந்த 2020ம் ஆண்டு, அக்டோபர் 10ம் தேதி லேவில் இருந்து மணாலி வரையிலான 472 கிமீ தூரத்தை தனியாக சைக்கிளின் மூலம் 35 மணி நேரம் 25 நிமிடத்தில் கடந்து சாதனை படைத்துள்ளார். இதனை தொடர்ந்து, கடந்தாண்டு அக்டோபர் 10ம் தேதி டெல்லியில் இருந்து தனது இரண்டாவது சாதனைக்கான சைக்கிள் பயணத்தை அவர் தொடங்கினார். டெல்லி, மும்பை, சென்னை மற்றும் கொல்கத்தாவை இணைக்கும் தங்க நாற்கர சாலையில் தனது சைக்கிள் பயணத்தை தொடர்ந்த அவர், 5942 கிமீ தூரத்தை 14 நாட்கள், 23 மணி நேரம், 52 நிமிடங்களில் கடந்து தனது 2வது சாதனையை படைத்துள்ளார். இதன் மூலம், கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். இந்த 2 சாதனைக்கான சான்றிதழையும் அவர் சமீபத்தில் பெற்றார்.

மூலக்கதை