கேரள முதல்வர் பினராய்க்கு கொரோனா தொற்று உறுதி

தினகரன்  தினகரன்
கேரள முதல்வர் பினராய்க்கு கொரோனா தொற்று உறுதி

திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராய் விஜயன் மகள் வீணா விஜயனுக்கு கடந்த 6ம் தேதி, கேரள சட்டப்பேரவை தேர்தலன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. வழக்கமாக, எல்லா தேர்தல்களிலும் வீணா, தந்தை பினராய் விஜயனுடன் தான் வாக்களிக்க செல்வார். ஆனால், கொரோனா பாதித்ததால் இந்த முறை அவர் மாலையில் பாதுகாப்பு கவச உடை அணிந்து வாக்களித்தார்.ேநற்று பினராய்க்கும் கொரோனா தொற்று உறுதியானது. கோழிக்கோடு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரின் உடல்நிலை சீராக உள்்ளது.நலம்பெற விரும்புகிறேன்: மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பதிவில்,  ‘பினராயி விஜயனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பது அறிந்து வருத்தமுற்றேன். அவர் விரைந்து நலம் பெற விழைகிறேன். பொதுவாழ்வில் ஈடுபட்டுள்ளோர் அனைவரும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

மூலக்கதை