வந்தார்கள்... சென்றார்கள்...

தினகரன்  தினகரன்
வந்தார்கள்... சென்றார்கள்...

ஐபிஎல் தொடர் 2008ல் தொடங்கியதில் இருந்து 8 அணிகள் நிரந்தரமாக விளையாடி வருகின்றன. முதல் 8 அணிகளில் ஒன்றான டெக்கான் சார்ஜர்ஸ் 2012ல் நீக்கப்பட்டது. 2013ல் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அறிமுகமானது. 2011ல் அணிகளின் எண்ணிக்கையை 10 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டு கொச்சி டஸ்கர்ஸ் கேரளா, புனே வாரியர்ஸ் இந்தியா அணிகள் அறிமுகமாயின. பிசிசிஐ விதிகளை கடைப்பிடிக்கவில்லை என்று கேரளா அணி அதே ஆண்டும், புனே வாரியர்ஸ் 2013லும் நீக்கப்பட்டன. தொடர்ந்து 2015ல் ‘மேட்ச் பிக்சிங்’ பிரச்னையால் சென்னை, ராஜஸ்தான் அணிகள் 2 ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டன. 2016, 2017ல் மட்டும் புனே சூப்பர் ஜயன்ட், குஜராத் லயன்ஸ் அணிகள் அறிமுகமாயின. அடுத்த ஆண்டு புதிதாக 2 அணிகள் அறிமுகமாக உள்ளன.அணிகள் வந்த பாதைசென்னை சூப்பர் கிங்ஸ்சென்னை இதுவரை 11 தொடர்களில் களம் கண்டு, 10 முறை பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது. 8 முறை இறுதிப்போட்டிக்குள் நுழைந்து அதிக முறை பைனலில் விளையாடிய அணி என்ற சாதனையை சொந்தமாக்கியுள்ளதுடன், 3 முறை கோப்பையை வென்றுள்ளது. கடந்த ஆண்டு முதல்முறையாக பிளே ஆப் சுற்றுக்குள் கூட நுழைய முடியவில்லை. 7வது இடத்தைதான் பிடித்தது.சன்ரைசர்ஸ் ஐதராபாத்ஐபிஎல் தொடரில் 2013ல் அறிமுகமாகி, இதுவரை விளையாடிய 8 தொடர்களில் 6 முறை பிளே ஆப் சுற்றில் முன்னேறி உள்ளது. 2016ல் கோப்பையை கைப்பற்றியது. கடந்த ஆண்டு 3வது இடம் பிடித்தது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்கோப்பை வெல்லும் ஆசையில் அணியில் மாற்றங்கள் நிகழ்ந்தாலும், அணித் தலைமையில் மாற்றமேயில்லை. ஒவ்வொரு முறையும் கோப்பை வெல்லும் அணி என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும், பல நேரங்களில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதே கனவாகி விடுகிறது. 6 முறை பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது. 2009, 2011, 2016ல் 2வது இடம் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு 4வது இடம் பிடித்தது.மும்பை இந்தியன்ஸ்இதுவரை 6 முறை பைனலுக்கு முன்னேறி 5 முறை கோப்பையை வசப்படுத்தியுள்ளது. இம்முறை ஹாட்ரிக் சாம்பியன் கனவுடன் களம் காண்கிறது. டெல்லி கேப்பிடல்ஸ்இதுவரை 13 தொடர்களில் விளையாடி 5 முறை பிளே ஆப் சுற்றில் கால் வைத்துள்ளது. கடந்த ஆண்டு முதல் முறையாக பைனலுக்கு முன்னேறி 2வது இடம் பிடித்தது. இப்போது கேப்டன் மாற்றத்துடன் களம் காண உள்ளது.பஞ்சாப் கிங்ஸ்கோப்பை வெல்லும் கனவில் அடிக்கடி மாற்றங்களை செய்யும் அணி இது. இந்த முறை கிங்ஸ் லெவன் பஞ்சாப் என்ற பெயரையும் பஞ்சாப் கிங்ஸ் என்று மாற்றியுள்ளது. ஒரே ஒரு முறை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய 2013ல் இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்றது. அதுதான் அதிகபட்ச சாதனை. கடந்த ஆண்டு 6வது இடத்தை எட்டியது.கொல்கத்தா நைட் ரைடர்ஸ்கொல்கத்தா அணி 2012, 2014ல் கோப்பையை கைப்பற்றியது. பைனலுக்கு முன்னேறிய 2 முறையும் கோப்பையை தனதாக்கியது. தலா 2 முறை 3வது, 4வது இடங்களை பெற்றது. கடந்த ஆண்டு 5வது இடம்தான் கிடைத்தது.ராஜஸ்தான் ராயல்ஸ்ஐபில் தொடரின் முதல் சாம்பியன் ராஜஸ்தான் அணிதான். அந்த அணி இதுவரை 11 தொடர்களில் விளையாடி 3 முறை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அதில் ஒருமுறை இறுதிபோட்டிக்கு முன்னேறி கோப்பையையும் கைப்பற்றியது. கடந்த முறை கடைசி இடம்தான் கிடைத்தது (8).தொடக்க விழா இல்லை வழக்கமாக ஐபிஎல் தொடர்கள் பிரமாண்ட விழாவாக கோலாகலமாக தொடங்கும். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக தொடக்க விழா ஏதுமின்றி போட்டிகள் நடத்தப்பட்டன. 2019ல் புல்வாமா தாக்குதல் சம்பவத்திற்கு பிறகு ஐபிஎல் நடந்ததால், தொடக்கவிழா உற்சாகங்கள் தவிர்க்கப்பட்டன. விழாவுக்கான செலவை புல்வாமா தாக்குதலில் பலியான எல்லை பாதுகாப்புப் படை வீரர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதியாக வழங்கப்பட்டது. 2020ல் கொரோனா பரவல் காரணமாக ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டது. தொடக்க விழா கொண்டாட்டம் தவிர்க்கப்பட்டதுடன், போட்டிகள் ரசிகர்களின்றி பூட்டிய அரங்கில் நடத்தப்பட்டன. இப்போது 3வது ஆண்டாக ஐபிஎல் தொடக்க விழா கொண்டாட்டங்கள் நடைபெறப் போவதில்லை. கொரோனா பரவலின் 2வது அலை தீவிரமாக உள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.அதிக சதம் அதிக சதம் விளாசிய வீரர்கள் பட்டியலில் பெங்களூர், பஞ்சாப் அணிகளுக்காக விளையாடிய கிறிஸ் கேல் (6) முதலிடத்தில் உள்ளார். ஒரே போட்டியில் அதிக ரன் குவித்த வீரர் என்ற பெருமையும் அவருக்கே (175* ரன்). விராத் 5, வார்னர், வாட்சன் தலா 4 சதம் அடித்துள்ளனர்.இதுவரை மோதியதில்...இரு அணிகளும் கடந்த 13 தொடர்களில் இதுவரை 27முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் மும்பை 17, பெங்களூர் 10 வெற்றி பெற்றுள்ளன. சூப்பர் ஓவருக்கு சென்ற ஒரு போட்டியில் பெங்களூர் வென்றது. கடைசியாக மோதிய 5 ஆட்டங்களில் மும்பை 3-2 என முன்னிலை வகிக்கிறது. அதிகபட்சமாக பெங்களூர் 235 ரன், மும்பை 213 ரன் எடுத்துள்ளன.  குறைந்தபட்ச ஸ்கோர்: பெங்களூர் 122, மும்பை 115.அதிக அரை சதம்வார்னர் 48 அரை சதம் விளாசி முதல் இடத்தில் இருக்கிறார். அடுத்த இடங்களில் தவான் (41), விராத், ரோகித் தலா 39 அரை சதம் அடித்திருக்கிறார்கள்.அதிக விக்கெட்விக்கெட் வேட்டையில் மலிங்கா (மும்பை, 170), அமித் மிஸ்ரா (டெல்லி, 160), சாவ்லா(சென்னை, 156), அஷ்வின் (டெல்லி, 138) முன்னிலை வகிக்கின்றனர்.அதிக ஹாட்ரிக்அமித் மிஸ்ரா (டெல்லி) அதிகபட்சமாக 3முறையும், 2வது இடத்தில் இருக்கும் யுவராஜ் சிங் (மும்பை) 2முறையும் ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளனர். ஐபிஎல் போட்டியில் முதல் முறையாக ஹாட்ரிக் விக்கெட் அள்ளிய பெருமைக்குரியவர் தமிழக வீரர் லட்சுமிபதி பாலாஜி(சென்னை). அவர் 2008ல் பஞ்சாப் அணிக்கு எதிராக 4 ஓவரில் 24ரன் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் அள்ளினார்.

மூலக்கதை