தெலங்கானாவில் பரபரப்பு 5 கிலோ தங்க ஆபரணங்கள் விவசாய நிலத்தில் புதையல்

தினகரன்  தினகரன்
தெலங்கானாவில் பரபரப்பு 5 கிலோ தங்க ஆபரணங்கள் விவசாய நிலத்தில் புதையல்

திருமலை: தெலங்கானா மாநிலம், ஜனகாமா மண்டலம், பெம்பார்த்தியை சேர்ந்த விவசாயி, விவசாயத்தில் லாபம் கிடைக்காமல் நஷ்டமடைந்து வந்துள்ளார். இதனால், நிலத்தை ரியல் எஸ்டேட் வியாபாரியான நரசிங்கா என்பவருக்கு விற்பனை செய்தார். இந்த நிலத்தை நரசிங்கா, ஜேசிபி இயந்திரம் மூலம் சமன்படுத்தும் பணியில் நேற்று ஈடுபட்டார். அப்போது, ஜேசிபி இயந்திரத்தில் பெரிய பாத்திரம் சிக்கி்யது. அதில், 5 கிலோ எடையுள்ள பழங்கால தங்க ஆபரணங்கள் இருந்தன. போலீசார் அவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த பகுதியில் வேறு எங்காவது இதேபோன்று தங்கப்புதையல் உள்ளதா என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை