படைகள் 'வாபஸ்' சீனா ஆலோசனை

தினமலர்  தினமலர்

பீஜிங்:'கிழக்கு லடாக் எல்லையில், கடந்த ஏப்ரலில் இருந்த நிலைமையை, மீண்டும் ஏற்படுத்த வேண்டும் என்ற,இந்தியாவின் பரிந்துரை பற்றி ஆலோசிக்கப்படும்' என, சீனா தெரிவித்துள்ளது.

லடாக் எல்லையில் கடந்த ஆண்டு ஜூலையில், சீன ராணுவம், நம் வீரர்கள் மீது, அத்துமீறி தாக்குதல் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது. எல்லையில், இரு நாடுகளும் படைகளை குவித்தன.பதற்றத்தை குறைக்க, இரு நாடுகளின் ராணுவ கமாண்டர்கள் அளவில் பேச்சு நடத்தப்பட்டது. 10 சுற்று பேச்சுக்கு பின், லடாக்கின் தெற்கு பகுதியிலிருந்து, படைகளை இரு நாடுகளும் வாபஸ் பெற்றன.

அடுத்த கட்ட பேச்சு, இன்று நடக்கும் என தெரிகிறது. இந்நிலையில், சீனா வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் கூறியதாவது:லடாக் எல்லையில், படைகளை முழுமையாக வாபஸ் பெறுவது பற்றி, இரு நாடுகளும் தொடர்ந்து பேசி வருகின்றன.

கிழக்கு லடாக் எல்லையில், கடந்த ஆண்டு ஏப்ர லில் இருந்த நிலையை, மீண்டும் ஏற்படுத்த வேண்டும் என, இந்தியா பரிந்துரைத்துள்ளது; இந்த பரிந்துரையை, சீனா நிச்சயம் ஆலோசிக்கும்.எல்லையில் பதற்றத்தை குறைத்து, அமைதியை ஏற்படுத்துவதில், இரு நாடுகளும் உறுதியாக உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை