சச்சின் ‘டிஸ்சார்ஜ்’ | ஏப்ரல் 08, 2021

தினமலர்  தினமலர்
சச்சின் ‘டிஸ்சார்ஜ்’ | ஏப்ரல் 08, 2021

மும்பை: கொரோனாவில் இருந்து மீண்ட சச்சின், ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டார்.

இந்திய கிரிக்கெட் ‘ஜாம்பவான்’ சச்சின் 47. சமீபத்தில் ராய்ப்பூரில் நடந்த ‘ரோடு சேப்டி வேர்ல்டு சீரிஸ்’ தொடரில் பங்கேற்றார். இத்தொடருக்குப் பின் சச்சினுக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டது. பரிசோதனை முடிவில் கொரோனா உறுதி செய்யப்பட, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் நேற்று, கொரோனா தொற்றில் இருந்து தேறிய சச்சின் மருத்துவமனையில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டு வீடு திரும்பினார். வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

இதுகுறித்து சச்சின், தனது ‘டுவிட்டரில்’ வெளியிட்ட செய்தியில், ‘‘மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிவிட்டேன். தொடர்ந்து தனிமைப்படுத்திக் கொண்டு ஓய்வு எடுத்து வருகிறேன். விரைவில் குணமடைய வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. சிகிச்சை அளித்த மருத்துவர்கள், செவிலியர்களுக்கு நன்றி. மருத்துவ பணியாளர்களுக்கு நன்றி உள்ளவனாக இருப்பேன்,’’ என, தெரிவித்திருந்தார்.

மூலக்கதை