சென்னையில் கோல்கட்டா வீரர்கள் | ஏப்ரல் 08, 2021

தினமலர்  தினமலர்
சென்னையில் கோல்கட்டா வீரர்கள் | ஏப்ரல் 08, 2021

மும்பை: ஐ.பி.எல்., தொடருக்கான கோல்கட்டா வீரர்கள் சென்னை வந்தனர்.

ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசன் இன்று துவங்குகிறது. இதில் இடம் பெற்றுள்ள 2 முறை சாம்பியன் கோல்கட்டா அணி, தனது முதல் மூன்று போட்டிகளை சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுகிறது. இதில் வரும் ஏப். 11ல் ஐதராபாத், ஏப். 13ல் ‘நடப்பு சாம்பியன்’ மும்பை, ஏப். 18ல் பெங்களூரு அணிகளை சந்திக்கிறது. இதற்கு தயாராகும் விதமாக கோல்கட்டா அணியின் குல்தீப் யாதவ், பெர்குசன், பாட் கம்மின்ஸ் ஏற்கனவே சென்னை வந்து, ஓட்டலில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். இந்நிலையில் கேப்டன் இயான் மார்கன், தினேஷ் கார்த்திக் கோல்கட்டா வீரர்கள் தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர்.

அதன்பின் கோல்கட்டா அணியினர், மும்பை, ஆமதாபாத், பெங்களூருவில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.

மூலக்கதை