தியேட்டர்களில் 50% சீட் அனுமதி.; ‘கர்ணன்’ ரிலீசாகுமா..? கலைப்புலி தாணு விளக்கம்

FILMI STREET  FILMI STREET
தியேட்டர்களில் 50% சீட் அனுமதி.; ‘கர்ணன்’ ரிலீசாகுமா..? கலைப்புலி தாணு விளக்கம்

கலைப்புலி தாணு தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ’கர்ணன்’.

இதில் தனுஷுடன் லால், யோகி பாபு, நட்டி, அழகம் பெருமாள், ராஜிஷா விஜயன், லட்சுமி ப்ரியா, கெளரி கிஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான இப்பட பாடல்களும் ’கர்ணன்’ டீசரும் பெரும் வரவேற்பை பெற்றது.

நீண்ட நாட்களுக்கு பிறகு தனுஷ் படம் ரிலீசாவதால் ‘கர்ணன்’ படத்திற்கு ஏதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

‘கர்ணன்’ நாளை ஏப்ரல் 9ல் ரிலீசாகிறது.

இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு நடவடிக்கையாக ஏப்ரல் 10 முதல் தமிழக திரையரங்குகளில் 50% இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

இதனால் ‘கர்ணன்’ பட ரிலீஸில் சிக்கல் எழுமோ? திட்டமிட்டப்படி படம் வெளியாகுமா? என ரசிகர்கள் மத்தியில் குழப்பம் உருவானது.

இதற்கு விளக்கம் அளித்துள்ளார் கர்ணன் படத் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு.

அவரது ட்விட்டர் பதிவில்…

As promised #Karnan will arrive to theatres tomorrow. As per the need guidelines of our Govt #Karnan will be screened with 50% capacity in theatres along with proper safety measures. I kindly request everyone to provide your support for #Karnan

சொன்னது சொன்னபடி கர்ணன் திரைப்படம் நாளை திரைக்கு வரும், அரசின் அறிவிப்பின் படி, 50% இருக்கைகளோடு தக்க பாதுகாப்புடன் திரையிடப்படும், #Karnan திரைப்படத்திற்கு உங்கள் பேராதரவை தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன் @dhanushkraja @mari_selvaraj @Music_Santhosh #KarnanFromTomorrow

Kalai Puli S Thanu opens on Karnan theatrical release

மூலக்கதை