கொரோனா தடுப்பு நடவடிக்கையில் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டு; கலெக்டர் சந்திரசேகர சகாமுரி வேண்டுகோள்

தினமலர்  தினமலர்
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டு; கலெக்டர் சந்திரசேகர சகாமுரி வேண்டுகோள்

கடலுார்; கடலுார் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கொரோனா தொற்று இரண்டாம் அலை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் சந்திரசேகர சகாமுரி தலைமையில் பல்வேறு துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் அவர் பேசியதாவது:கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அத்தியாவசிய தேவையின்றி பொதுமக்கள் வெளியே வரவேண்டாம். வெளியே வந்தால், சமூக இடைவெளியை கடைபிடித்து, முகக்கவசம் அணிந்து வரவேண்டும்.நகராட்சி, பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி பகுதியில் கிருமி நாசினி தெளித்து துாய்மையாக வைக்க வேண்டும்.துணிக்கடைகள், காய்கறி, மளிகைக் கடைகள் போன்ற அத்தியாவசிய கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், கடை உரிமையாளர்கள் துாய்மைப் பணிகள், கிருமி நாசினி தெளிப்பு போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பொது சுகாதார வளாகங்களை துாய்மையாக வைக்க பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும்இரண்டாம் அலையில் நோய் பரவுதல் அதிகரித்து வருவதும் நோய் கண்டவர்களின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் தொற்று பரவல் அதிகமாக உள்ளதால், சமூக இடைவெளியை வீடுகளிலும் கடைபிடிக்க வேண்டும்.தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடைய நோய் அறிகுறிகள், குடும்ப நபர்கள், அவருடன் தொடர்பில் இருந்தவர்களின் விபரங்களை சேகரித்து சளி மாதிரி சேகரித்து பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும்.

இதற்காக வட்டாரங்கள் தோறும் குழுக்கள் அமைத்து பணிகள் மேற்கொள்ள வேண்டும். காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் அதிகம் நடத்த வேண்டும். கொரோனா பரிசோதனை முகாம்களை அதிகப்படுத்த வேண்டும்.கூட்டத்தில் டி.ஆர்.ஓ., அருண்சத்யா, திட்ட இயக்குனர் மகேந்திரன், சப் கலெக்டர்கள் விருத்தசாலம் பிரவின்குமார், சிதம்பரம் மதுபாலன், ஆர்.டி.ஓ., ஜெகதீஸ்வரன், நலப்பணிகள் இணை இயக்குனர் ரமேஷ்பாபு, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் செந்தில்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

மூலக்கதை