கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளில் 80 சதவீதம் பேர் ஓட்டளிப்பு

தினமலர்  தினமலர்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளில் 80 சதவீதம் பேர் ஓட்டளிப்பு

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டசபை தொகுதிகளில் 80 சதவீதம் ஓட்டுகள் பதிவாகின. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், உளுந்துார்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி(தனி) ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகள் உள்ளன. நேற்று முன்தினம் நடந்த தேர்தலில் வாக்காளர்கள் பலர் ஆர்வமுடன் ஓட்டளித்தனர். உளுந்துார்பேட்டை தொகுதியில் 2 லட்சத்து 93 ஆயிரத்து 362 வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஒரு லட்சத்து, 21 ஆயிரத்து 130 ஆண்கள், ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 834 பெண்கள், ஒரு திருநங்கை என மொத்தம் 2 லட்சத்து 41 ஆயிரத்து 965 பேர் என 82.48 சதவீதம் ஓட்டுகள் பதிவாகியது. ரிஷிவந்தியம் தொகுதியில் 2 லட்சத்து 68 ஆயிரத்து 231 வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 991 ஆண்கள், ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 633 பெண்கள் 5 திருநங்கைகள் என மொத்தம் 2 லட்சத்து 13 ஆயிரத்து 629 பேர் ஓட்டளித்ததன் மூலம் தொகுதியில் 79.64 சதவீதம் ஓட்டுகள் பதிவாகியது. சங்கராபுரம் தொகுதியில், 2 லட்சத்து 68 ஆயிரத்து 535 வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 894 ஆண்கள், ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 341 பெண்கள் 2 திருநங்கைகள் உட்பட 2 லட்சத்து 13 ஆயிரத்து 237 பேர் என தொகுதியில் 79.41 சதவீதம் ஓட்டுகள் பாதிவாகியது. கள்ளக்குறிச்சி தொகுதியில் 2 லட்சத்து 86 ஆயிரத்து 578 வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 115 ஆண்கள், ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 343 பெண்கள், 33 திருநங்கைகள் என மொத்தம் 2 லட்சத்து 24 ஆயிரத்து 491 பேர் வாக்களித்துள்ளனர். தொகுதியில் 78.34 சதவீதம் ஓட்டுகள் பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டசபை தொகுதிகளிலும் 11 லட்சத்து 16 ஆயிரத்து 706 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 4 லட்சத்து 42 ஆயிரத்து 130 ஆண்கள், 4 லட்சத்து 51 ஆயிரத்து 151 பெண்கள், திருநங்கைகள் 41 உட்பட மொத்தம் 8 லட்சத்து 93 ஆயிரத்து 322 பேர் வாக்களித்துள்ளனர். மாவட்டத்தில் 80 சதவீதம் அளவிற்கு ஓட்டுகள் பதிவாகின.

மூலக்கதை