மஹா., அரசு, தேஷ்முக் மனு மீது இன்று விசாரணை

தினமலர்  தினமலர்
மஹா., அரசு, தேஷ்முக் மனு மீது இன்று விசாரணை

மும்பை : மஹாராஷ்டிராவில், முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மீதான ஊழல் புகாரை சி.பி.ஐ., விசாரிக்க, மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து, மாநில அரசு, மேல்முறையீடு செய்துள்ள மனு மீது, உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை நடத்துகிறது.

மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது.

இங்கு, மும்பை போலீஸ் கமிஷனர் பதவியிலிருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்ட பரம்வீர் சிங், உள்துறை அமைச்சராக இருந்த, தேசியவாத காங்., கட்சியைச் சேர்ந்த அனில் தேஷ்முக் மீது, சமீபத்தில் ஊழல் புகார் கூறினார்.

மூலக்கதை