கோவிட்-19 தடுப்பூசி போட்டு இருந்தாலும் காரில் தனியாக சென்றாலும் மாஸ்க் அணிவது கட்டாயம்

தினகரன்  தினகரன்
கோவிட்19 தடுப்பூசி போட்டு இருந்தாலும் காரில் தனியாக சென்றாலும் மாஸ்க் அணிவது கட்டாயம்

* உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு * அரசு உத்தரவை எதிர்த்த மனு தள்ளுபடிபுதுடெல்லி: கொரோனா தொற்று நோய் பரவல் அச்சுறுத்தல் உள்ளபோது, கொரோனா தடுப்பூசி போட்டு இருந்தாலும், இல்லாவிட்டாலும் தனியாக காரில் செல்லும் போது முககவசம் அணிவது கட்டாயமாகும் என்று டெல்லி உயர்  நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த நகரில் டெல்லி மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்த வரிசையில், பொது இடங்களுக்கு அரசு மற்றும் சொந்த காரில் தனியாக செல்லும்போதும் மாஸ்க் அணிவது கட்டாயம் என கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு உத்தரவை பிறப்பித்தது. அதனடிப்படையில், மாஸ்க் அணியாமல் கார் ஒட்டிச்சென்றவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர். இதனால் பாதிக்கப்பட்ட வக்கீல்கள் நால்வர் டெல்லி அரசின் இந்த உத்தரவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவில், அபராதம் விதிக்க அதிகாரம் பெற்ற மாவட்ட ஆட்சியர்கள்,  தங்களுக்கு வழஙகப்பட்ட அதிகாரங்களை மற்றவர்களிடம் ஒப்படைக்க முடியாது.எனவே, மாஸ்க் அணியதாததற்காக போலீசார் அபராதம் விதிக்கபட்டதை தள்ளபடி செய்ய வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். ஆனால், இந்த வாதங்களை ஏற்க மறுத்த நீதிபதி, நான்கு மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதுபற்றி நீதிபதி தனது உத்தரவில் விளக்கம் அளித்து கூறியுள்ளதாவது: தொற்றுநோய் காலத்தில் முககவசம் அணிவது என்பது சுரக்‌ஷா கவாச்  போன்தாகும். தொற்று பரவாமல் தன்னை தற்காத்து கொள்வதோடு, மற்றவர்களுக்கும் பரவாமல் இருப்பதை இது உறுதி செய்யும் சிறந்த வழியாகும். எனவே, மனுதாரர்கள் வக்கீல்கள் மற்றும் அட்வகேட் என்றாலும் அவர்கள் அரசின் இந்த சட்டங்களை மதிக்கும்பட்சத்தில், அது பொதுமக்களுக்குமுன்னுதாரணமாக இருக்கும். முககவசம் அணியும் ஒற்றை நடவடிக்கை என்பது பல ஆயிரம் பேரின் உயிர் காப்பாற்றக்கூடியதாகும். காரில் தனியொரு நபராக அமர்ந்து இருந்தாலும், அவர் வெளியுலக தொடர்பில் இருப்பதாகவே கருதப்படும். அவரால் வெளியில் உலகில் உள்ளவர்களுக்கு தொற்று பரவும் வாய்ப்பு உள்ளது. எனவே, காரை தனியார் ஓட்டிசெல்வதால் அவர் பொதுஇடத்தில் இல்லை என்று கூறமுடியாது. சம்மந்தப்பட்ட நபர் கொரோனா தடுப்பூசி போட்டி இருந்தாலும், இல்லாவிட்டாலும் கொரோனா காலத்தில் மாஸ்க் அணிவது கட்டாயமாகும். தொற்றுநோய்  பரவ தொடங்கியதும், உலகளவிலும், தேசிய அளவிலும் உள்ள விஞ்ஞானிகள்,  ஆராய்ச்சியாளர்கள், சர்வதேச அமைப்புகள் மற்றும் அரசாங்கங்கள் நோய்  பரவுவதைக் கட்டுப்படுத்த முககவசங்களை அணிவதன் முக்கியத்துவத்தை  வலியுறுத்தியுள்ளன. கொரோனவை தடுப்பதற்கான ஒரு முழுமையான உறுதியான  சிகிச்சை இல்லாத நிலையில், உலகம் தொற்றுநோயுடன் தொடர்ந்து போராடி வருகிறது.  கொரோனாவை தடுக்க சில தடுப்பூசிகளை அறிமுகப்படுத்தியபோதும் மாஸ்க் அணிவது  தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது.எனவே, ஒரு நபருக்கு தடுப்பூசி போடப்பட்டதா  இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல் முககவம் அணிவது அவசியமாகும்.எனவே, அரசின் இந்த உத்தரவு குறித்து வக்கீல்கள் சட்டரீதியான கேள்விகளை எழுப்புவதை தவிர்த்துவிட்டு மாஸ்க் அணிவது கட்டாயம் என்கிற உத்தரவை அமல்படுத்த வக்கீல்கள் உதவிட வேண்டும். இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் விளக்கமளித்துள்ளார்.இளசுகள் திருமணத்திற்கு காத்திருப்புஅதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த நகரில் மீண்டும் இரவுநேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், திருமணம் செய்துகொள்ள நாள் குறித்து தயாராகி வந்த புதுமண தம்பதிகள் கலக்கமடைந்துள்ளனர். இதனால் அவர்கள் அடுத்தது என்ன செய்வது என்பது குறித்து பலரும் புதிய திட்டமிடலை தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முக்கியமாக திருமண மண்டபங்கள் புக் செய்வது பாதிக்கப்பட்டுள்ளதாக அதன் உரிமையாளர்கள் கவலை தெரிவித்தனர். அதோடு, திருமணத்திற்கு நாள் குறித்து மண்டபம் புக் செய்த பலம், அரசின் தற்போதைய கட்டுபாடு மற்றும் கெடுபிடிகளால் நொய்டா, காஜியாபாத் உள்ளிட்ட அண்டை நகரங்களை நோக்கி நகர தொடங்கியுள்ளனர்.

மூலக்கதை