நாடு முழுவதும் 100 இடங்களில் கொள்ளை 4 வங்கதேசத்தினர் கைது

தினகரன்  தினகரன்
நாடு முழுவதும் 100 இடங்களில் கொள்ளை 4 வங்கதேசத்தினர் கைது

புதுடெல்லி: நாடு முழுவதும் 100 இடங்களில் கொள்ளையடித்த 4 வங்கதேசத்தினரை போலீசார் கைது செய்தனர்.டெல்லி குற்றப்பிரிவு போலீசாருக்கு ஒரு கும்பல் ஹவுஸ்ஹாஸ் பகுதியில் கொள்ளையடிக்கப்போவதாக தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ஷீபெஸ்சிங் தலைமையில் போலீசார் அந்த பகுதியில் குவிக்கப்பட்டனர். கொள்ளையர்கள் அருண்ஜெட்லி பூங்கா வழியாக போர்ட் ரோடுக்கு செல்வதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ரபிக் லாஸ்கர்(33), முகமது சலீம்(26), அஜிசுல் ரெகுமான்(25), முகமது ரசாக்(36) ஆகிய 4 பேரை பிடித்தனர். அவர்கள் வங்கதேச நாட்டை சேர்ந்தவர்கள் என்பதும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சட்டவிரோதமாக இந்தியாவில் நுழைந்து டெல்லியில்  வசித்து வருவதும் தெரியவந்தது. மேலும் பணம் எளிதாக சம்பாதிக்க ெகாள்ளை போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் அவர்கள் 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது பரிதாபாத், ஜோத்பூர், அவுரங்காபாத், குல்பர்கா, வாபி, பெங்களூரு, புனே, மும்பை உள்பட நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த கும்பல் கொள்ளையடித்து இருப்பது கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் கொள்ளையடிக்க செல்லும் இடங்களில் வீடு மற்றும் கதவுகளை உடைக்க வசதியாக அனைத்து ஆயுதங்களையும் வைத்திருப்பதுடன், கொள்ளையடிக்கும் இடத்தில் எதிர்க்கும் நபர்களை சிறைபிடித்த துணிகரத்தையும் நடத்தி உள்ளனர். அவர்களிடம் இருந்து நாட்டுத்துப்பாக்கி, கத்தி, 4 தோட்டாக்கள், கொள்ளையடிக்க பயன்படுத்தி ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

மூலக்கதை