டெல்லி கலவர வழக்கு ஜமியா பல்கலை மாணவர் தன்ஹா ஜாமீன் கேட்டு மேல்முறையீடு: விசாரணை நீதிமன்றத்துக்கு ஐகோர்ட் உத்தரவு

தினகரன்  தினகரன்
டெல்லி கலவர வழக்கு ஜமியா பல்கலை மாணவர் தன்ஹா ஜாமீன் கேட்டு மேல்முறையீடு: விசாரணை நீதிமன்றத்துக்கு ஐகோர்ட் உத்தரவு

புதுடெல்லி: வடகிழக்கு டெல்லி கலவரத்தில், ஜமியா இஸ்லாமியா பல்கலை மாணவர் ஆசிப் இக்பால் தன்ஹா சதிதிட்டம் தீட்டியதாக தொடரப்பட்ட வழக்கில், பாதுகாக்கப்பட்ட சாட்சிகளின் வாக்குமூலங்களை சீலிடப்பட்ட உறையில் வைத்து சமர்ப்பிக்குமாறு விசாரணை நீதிமன்றத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேசிய குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி ஆதரவு மற்றும் எதிர்ப்பு குழுக்களுக்கிடையே மோதல் வெடித்தது.வன்முறையாக மாறியதில் 53 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். வாகனங்கள் தீயிட்டுக்கொளுத்தப்டப்டன.  இந்த வழக்கை விசாரித்து வரும் டெல்லி போலீசார் பலரை கைது  செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர்களில் ஜமியா பல்கலையை சேர்ந்த மாணவர் தன்ஹாவும் ஒருவர். இவருக்கு எதிராக உபா பயங்கரவாத சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால் கடந்த ஆண்டு மே மாதம் முதல் சிறையில் இருந்து வருகிறார்.இந்நிலையில், ஜாமீன் வழங்கக்கோரி தாக்கல் செய்த தன்ஹாவின் மனுவை விசாரணை நீதிமன்றம் கடந்த ஆண்டு அக்டோபர் 26ம் தேதியிட்ட உத்தரவில் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. விசாரணை நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தன்கஹா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து ஜாமீன் வழங்ககோரியிருந்தார். மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி, சாட்சிகளின் வாக்குமூலங்கள் அடங்கிய நகல்களை சமர்ப்பிக்குமாறு போலீசாரிடம் கடந்த மார்ச் 18ம் தேதி உத்தரவிட்டு வழக்கை ரிசர்வ் செய்து இருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் நீதிபதி பிரதீபா எம் சிங முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் சாட்சிகளின் வாக்குமூலங்கள் அடங்கிய நகல்களை நீதிபதி கேட்டபோது, அவை பாதுகாக்கப்பட்ட சாட்சிகளின் வாக்குமூலங்கள் என்பதால் அவை விசாாரணை நீதிமன்றத்தால் கையெழுதிட்டு பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது. ஆகவே அவற்றை சமர்ப்பிக்க இயலவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். ‘இதனை ஏற்க மறுத்த நீதிபதி, வாக்குமூலங்களின் நகல்கள் கூட போலீசாரிடம் இல்லை என்பது ஆச்சரியமளிக்கிறது என்று கூறிய நீதிபதி, அவற்றின் ஒரிஜினல் வாக்குமூலம் ஆவணங்களை சீலிட்ட உறையில் நீதிமன்றத்தில் சமர்பிக்க விசாரணை நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டார். முன்னதாக, இந்த வழக்கில் தன்ஹாவின் வக்கீல் கூறுகையில், இந்த வழக்கில் தன்ஹாவுக்கு எந்த சம்மந்தமுமில்லை என்றும் கலவரம் நடந்தசமயத்தில் அவர் டெல்லியிலேயே இல்லை என்றும் விசாரணை நீதிமன்றத்தில் வாதிட்டு இருந்தார். மேலும், எந்தவித தீவிரவாத இயக்கங்களிடமிருந்தும் தன்ஹா நிதி எதையும் பெறவில்லை என்றும் கூறியிருந்தார். ஆனாலும், அவர் மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதாக கூறி விசாரணை நீதிமன்றம் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை